மணி ரத்னம் படத்துக்கு டப்பிங் பேசிய டாப் நடிகை… யார்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க??
கடந்த 2002 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், கீர்த்தனா பார்த்திபன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கன்னத்தில் முத்தமிட்டால்”. இத்திரைப்படம் பொருளாதார ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதில் அமுதாவாக நடித்திருந்த கீர்த்தனா, தனது யதார்த்தமான நடிப்பால் பார்வையாளர்களின் மனதை கொள்ளைக்கொண்டார். குறிப்பாக தான் ஒரு வளர்ப்பு மகள் என்ற உண்மையை தெரிந்துகொண்டப் பிறகு அமுதாவின் மனதில் ஏற்படும் துயரத்தையும், தனது நிஜ அம்மாவை தேடிக் கண்டுபிடித்து ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையையும் தனது அபாரமான நடிப்பால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டையும் தனதாக்கிக்கொண்டார் கீர்த்தனா.
இதில் கீர்த்தனாவின் அம்மவாக நடித்திருந்தவர் பிரபல பாலிவுட் நடிகையான நந்திதா தாஸ். இவர் இத்திரைப்படத்தில் ஈழப் போராளியாக நடித்திருந்தார். இந்த நிலையில் நந்திதா தாஸுக்கு ஈழத்தமிழில் பின்னணி குரல் கொடுத்த டாப் நடிகையை குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் நந்திதா தாஸுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சுகன்யா. இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட சுகன்யா “திடீரென்று ஒரு நாள் மணி ரத்னம் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘ஒரு திரைப்படத்திற்கு ஈழத்தமிழில் பேச வேண்டும், பேசமுடியுமா?’ என கேட்டார்கள். அப்போது நான் ‘சென்னையில் பல இலங்கை தமிழர்கள் இருக்கிறார்களே, அவர்களை பேசவைக்கலாமே’ என்று கூறினேன்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்.. ஆனா கொஞ்ச நேரத்துல காத்துல பறந்துப்போச்சு.. ஏன் தெரியுமா?..
ஆனால் ‘அவர்கள் ஈழத்தமிழில் பேசினாலும் டப்பிங் பேசுவதற்கான திறமை போதவில்லை.’ என பதில் வந்தது. அதன் பின் ஸ்டூடியோவிற்குச் சென்று ஈழத்தமிழில் பேசிக்காட்டினேன். உடனே அவர்கள் மகிழ்ச்சியடைந்துவிட்டார்கள். அன்றைக்கே நான் டப்பிங் பேசத் தொடங்கிவிட்டேன்” என தான் டப்பிங் பேசிய அனுபவத்தை கூறியிருந்தார்.