இதுவரை ரஜினிகூட நடிக்காத பிரபல நடிகை!.. ‘முத்து’ பட வாய்ப்பு வந்தும் அவரிடம் மறைத்த சோகமான சம்பவம்..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இப்போது ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் போய்க் கொண்டிருந்தாலும் படத்தில் நடிக்கும் பிரபலங்களை தேடும் படலம் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கின்றது.
ரஜினியின் படத்தில் ஒரு கேரக்டர் ரோலாக கிடைத்தாலும் பரவாயில்லை என்று ஏங்கி நிற்கும் நடிகர் நடிகைகள் ஏராளம். இதில் மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட வருத்ததில் இருக்கிறார் ஒரு பிரபல நடிகை. அதுமட்டுமில்லாமல் 90களில் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தாலும் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லையாம்.
சினிமாவின் முக்கிய ஆளுமைகளாக கருதப்படும் கமல்,விஜய்காந்த், சத்யராஜ், கார்த்திக், மலையாள நடிகர் மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்தவர் ரஜினியை மட்டும் தவறவிட்டு விட்டார். அவர் வேறுயாருமில்லை நடிகை சுகன்யாதான். நடிப்பு மட்டுமில்லாமல் பரதம், நடனம், இசை, பாடல் என பன்முகத்திறமைகள் வாய்க்கப் பெற்றவர் சுகன்யா.
இதையும் படிங்க : ‘இந்தியன்’ படத்தில் எனக்கு ஏற்பட்ட அநீதி!.. உதவிக்கரம் நீட்டிய நடிகர் சங்கம்.. சுகன்யா ஓபன் டாக்!.
புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கொஞ்ச நாள்களிலேயே ஒருதவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார். கே.எஸ்.ரவிக்குமாரும் மூன்று முறை இவரை அணுகியும் அவர் படத்திலயும் சுகன்யாவால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். ஒரு சமயம் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி சென்ற சுகன்யா விமான நிலையத்தில் ரவிக்குமாரை சந்தித்துள்ளார்.
அப்போது ரவிக்குமார் பரம்பரை படத்தின் படப்பிடிப்பிற்காக அங்கு சென்றிருக்கிறார். சுகன்யாவை பார்த்து மூன்று தடவை உன்னை மிஸ் செய்து விட்டேன். மேலும் முத்து படத்திலும் உன்னை தவறவிட்டு விட்டேன் என்று கூறினாராம். இதை கேட்டதும் சுகன்யாவிற்கு அதிர்ச்சியாம். முத்து படமா? அதை பற்றி என்னிடம் கேட்கவில்லையே! என்று கூறினாராம்.
இதையும் படிங்க :சிவாஜியே பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்… அட இது தெரியாம போச்சே!…
அதற்கு ரவிக்குமார், இல்லை முத்து படத்தில் நடிப்பதற்காக உன் கால்ஷீட் கேட்க நான் ஆள் அனுப்பினேன், நீ தான் முடியாது என்று சொல்லிவிட்டாய் என்று கூறும் போது ஐய்யோ நல்ல வாய்ப்பு, போய்விட்டது என்று வருந்தி அதைப் பற்றி தன்னிடம் யாரும் வந்து கூறவில்லை என்று சொல்லியிருக்கிறார். இல்லையென்றால் மீனா கதாபாத்திரத்தில் சுகன்யாதான் இருந்திருப்பார். இருந்தாலும் மீனாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது என்று சுகன்யா பாராட்டினார்.