18 வயசுல கல்யாணம்! 23 வயசுல விவாகரத்து! எம்.எஸ்.வியின் மருமகளுக்கு நேர்ந்த கொடுமை..

sula
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்ஜிஆர் சிவாஜி படங்கள் எல்லாமே இவரின் இசையில் தான் அலங்கரித்தன. இவர் இசையில் டி.எம்.எஸ், சுசீலா போன்ற பழம்பெரும் பாடகர்கள் தங்கள் குரல் மூலம் அலங்கரித்தனர். இப்பொழுது இருக்கும் பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவே எம்.எஸ்.வி கருதப்படுகிறார்.

sula1
அவரின் பெருமை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அப்பேற்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் நடிகை சுலோக்ஷனா. தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமானார். ஆனால் 2வயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
ரஜினி, கமல் இவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்திருப்பார். மேலும் தம்பிக்கு எந்த ஊரு படத்திலும் நடித்திருக்கிறார். 14 வயசில் ஹீரோயின் ஆன சுலோக்ஷனா 16 வயதுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக மாறினார்.

sula2
18 வயசில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் எம்.எஸ்.வியின் மூத்தமகனாம். அவரும் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதால் அவருடைய ஒரு படத்தில் சுலோக்ஷனா நடித்ததன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். ஆனால் இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் சுலோக்ஷனா வீட்டில் எம்.எஸ்.வி நேராக வந்து பெண் கேட்க வேண்டும் என கூறினார்களாம். ஆனால் அவர் எப்படி வருவார் என்று சுலோக்ஷனா கூறினார். அதனால் தனியாக ஒரு வீட்டை பிடித்து ரிஜிஸ்டரர் முன்னாடி அந்த வீட்டில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம். அதன் பின் எம்.எஸ்.வி வீட்டில் சுலோக்ஷனாவை ஏற்றுக் கொண்டார்களாம்.

sula3
நல்லபடியாக பார்த்துக் கொண்டார்களாம். ஆனால் 23வயதில் இருவரும் விவாகரத்து பெற்றிருக்கின்றனர். அதற்கான காரணத்தை சுலோக்ஷனா சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதன் பின் இத்தனை வருடகாலமாக தனியாக தன்னுடைய குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் அவருடைய கணவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் அவ்வப்போது சுலோக்ஷனாவும் அவருடைய கணவரும் நண்பர்களாக பழகி வருவார்களாம். ஏன் இரண்டாவதாக திருமணம் செய்யவில்லை என்று கேட்டதற்கு ஒரு முறை சூடு கண்ட பூனை மறுபடியும் அந்தப் பக்கம் போகாது என்று கூறினார்.
இதையும் படிங்க : உங்க அப்பாவுக்கு அப்படி என்ன கோவம் என் மேல? சூர்யாவிடம் எரிந்து விழுந்த ஜோதிகா!