More
Categories: Cinema News latest news

ஷாக்கிங்!.. சுனைனாவுக்கு என்ன ஆச்சு?.. மருத்துவமனையில் இந்த கோலத்தில் இருக்காரே!..

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுனைனா தொடர்ந்து பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வந்த நிலையில், தற்போது தீடிரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூக்கிலும், கையிலும் ட்யூப் ஏற்றிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, லத்தி மற்றும் சமீபத்தில் வெளியான ரெஜினா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: எல்லா ரெக்கார்டும் காலி!.. நிஜமாவே நம்பர் ஒன் என நிரூபித்த விஜய்.. லியோ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டிய சுனைனா அந்தப்படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.

34 வயதாகும் நடிகை சுனைனா சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், திடீரென தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் தான் குணமாகி விடுவேன் என்றும் எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அனிருத்துக்கே தம்மாத்துண்டு தானா..! அட்லீயே பரவாயில்லப்பா… இந்த லோகேஷ் இப்படி பண்ணிட்டாரே..!

சுனைனாவை மருத்துவமனையில் அந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என்றும் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்றும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில், தற்போது நடிகை சுனைனாவுக்கு என்ன ஆயிற்று என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதிகமாக டயட் இருந்ததால் இப்படி ஆனதா? அல்லது விபத்தில் ஏதும் சிக்கி விட்டாரா? என பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எப்படி இருந்தாலும், பழையபடி சுனைனா எழுந்து வந்து ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் அனைவரும் பிரார்த்தனையாக உள்ளது.

 

Published by
Saranya M

Recent Posts