Connect with us

Cinema News

அனிருத்துக்கே தம்மாத்துண்டு தானா..! அட்லீயே பரவாயில்லப்பா… இந்த லோகேஷ் இப்படி பண்ணிட்டாரே..!

Anirudh: தமிழ் சினிமாவில் தற்போதைய ட்ரெண்ட் இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு போட்டியே இல்லாமல் இருப்பவர் அனிருத் தான் என்ற நிலை உருவாகி விட்டது. பஞ்சம் ஏற்பட்டது போல எல்லா டாப் நடிகர்களுக்கும் ஒற்றை ஆளாக அனிருத் கையால் தான் பிஜிஎம் கிடைக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஒரே படத்தில் தன்னுடைய வொய் திஸ் கொலவெறி பாடலின் மூலம் உலகளவில் வைரலாக பேசப்பட்டார். அதை தொடர்ந்து நிறைய படங்களில் தனுஷுடன் இணைந்தார்.

இதையும் வாசிங்க:எதிர்மறையான கதாபாத்திரத்தில் கலக்கிய சிவாஜி கணேசன்… எந்த படத்துலனு தெரியுமா?…

ஒரு கட்டத்தில் இருவருக்குமே பிரிவு ஏற்பட தனியாக வந்த தனுஷ் தமிழ் சினிமாவில் டாப் ஹிட் பிரபலங்களுக்கு இசையமைத்து வந்தார். இதில் நானும் ரவுடிதான், பேட்ட, பீஸ்ட், டாக்டர் உள்ளிட்ட படங்கள் அவரது திரை வாழ்வில் மைல்கல்லாக இருந்தது.

சமீபத்தில் வெளியான ஜெயிலர், ஜவான் உள்ளிட்ட படங்களுக்குமே அனிருத் தான் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்துமே ஓஹோ ஹிட் அடித்தது. தொடர்ந்து விஜயின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமலின் இந்தியன் 2 ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இதையும் வாசிங்க: எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!…

இந்நிலையில் சமீபத்தில் விஜயின் லியோ படத்திற்கு இசையமைக்க அவருக்கு 8 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதுவே ஜவான் படத்திற்கு அனிருத்திற்கு 10 கோடி வரை கொடுக்கப்பட்டதாம். ஆனால் ஜெயிலர் படத்துக்கு 5 கோடிக்குள் தான் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top