தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்க்கு, தமிழ்நாட்டிற்கு இணையாக கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவில் அவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள் திருவிழா போலக் கொண்டாடப்படும். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட ‘லப்பர் பந்து’ பட நடிகை சுவாசிகா, விஜய் குறித்துப் பேசிய வார்த்தைகள் அரங்கத்தை அதிர வைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா ஒன்றில், அட்டகத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை சுவாசிகா கலந்துகொண்டார். மேடையில் விருது பெற்ற பின் பேசிய அவர்,
எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நடிகர் விஜய்யை அப்படியே மலையாள சினிமாவுக்குக் கடத்திச் சென்று விடுவோம். அங்கு அவரை நாங்கள் இன்னும் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவோம் என்று தனது அன்பையும், கேரள ரசிகர்களின் உணர்வையும் வெளிப்படுத்தினார். அவர் இப்படிக் கூறிய மறுகணமே, அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் கை தட்டி, ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…