Cinema News
திரிஷா அந்த செய்தியை கேட்டு வருத்தப்பட்டாங்க! வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்த சீக்ரெட்
Trisha: தமிழ் சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கிட்டத்தட்ட 20 வருடகாலமாக இந்த சினிமாவில் ஒரு வெற்றி நாயகியாக பயணித்து வருகிறார். அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் நடித்த திரிஷா இன்னும் முன்னணி நடிகையாகவே ஜொலித்துவருகிறார். இடையில் திருமண பிரச்சினையின் காரணமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவில் பெரிதாக திரிஷாவை பார்க்கமுடியவில்லை.
பொன்னியின் செல்வன் படத்தில் கம்பேக் கொடுத்தார் திரிஷா. ஒரு அழகு பதுமையாக அந்தப் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த திரிஷாவுக்கு அடுத்தடுத்து விஜய், அஜித், கமல் என இவர்களின் படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்
லியோ படத்தில் நடித்த திரிஷா அடுத்ததாக அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. இந்த நிலையில் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று ரிலீஸான கோட் படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார் திரிஷா . இந்த நிலையில் திரிஷாவை பற்றி வலைப்பேச்சு சேனலில் ஒரு விஷயம் பேசியிருந்தார்கள். அதாவது விஜய் அலுவலத்திற்கு பக்கத்திலேயே திரிஷாவும் வீடு வாங்கியிருக்கிறார் என்று கூறியிருந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் லிஃப்ட்டில் விஜயும் திரிஷாவும் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது. அதனை தொடர்ந்துதான் விஜய் ஃப்ளாட் பக்கத்திலேயே தான் திரிஷாவும் ஃப்ளாட் வாங்கியிருக்கிறார். அதனால் இருவரும் ஒரே லிஃப்டில் பயணித்திருப்பார்கள் என்றெல்லாம் வலைப்பேச்சில் கூறியிருந்தார்கள்.
இதையும் படிங்க: வேண்டாம் வந்துராதீங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு வெளியில வந்தோம்… கண்ணீர்விடும் விஜய் ரசிகர்கள்
ஆனால் அது உண்மையில்லையாம். இந்த செய்தி கேட்டு திரிஷா மிகவும் வருத்தினாராம். அவர் வருத்தப்பட்ட செய்தியை வலைபேச்சில் சில முக்கியவாசிகள் சொல்ல அதன் பிறகு மீண்டும் அதே வலைப்பேச்சில் தவறாக சொல்லிவிட்டோம் என்பது மாதிரி பேசியிருந்தார்கள். இதை பற்றி அந்தணன் கூறும் போது ‘ நாங்கள் கூறிய செய்தி ஒரு வேளை தவறாக இருக்கும் பட்சத்தில் அதை நாங்கள் திருத்திக் கொள்வோம். அதுதான் நியாயம்’ என கூறினார்.
ஏனெனில் வலைப்பேச்சு சேனலுக்கும் யோகிபாபுவுக்கும் இடையே ஒரு பஞ்சாயத்து சென்று கொண்டிருக்க நாங்கள் இப்படிப்பட்டவர்கள் என்பதை நிருபிக்கத்தான் அந்தணன் திரிஷா மேட்டரை பற்றி சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: ராமமூர்த்திக்கு நீர்மாலை எடுத்த பாக்கியா.. மீனா மீது கடுப்பில் ரோகிணி.. கவலையில் மீனா மற்றும் ராஜி..