விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்

தளபதி விஜய் நடிப்பில் நேற்று கோட் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கும் வரலை. அவரு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தும்போதும் வரல. மனைவி, மகன், மகள் ஏன் வரல. அவங்களுக்கு அப்படி என்ன கோபம்னு பிரபல யூடியூபர் பயில்வான் ரங்நாதன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பிக்கிறாரு. கொடியும் ஏற்றி இருக்காரு. ஆனா அவரோட மனைவி, மகன், மகள் யாருமே வரலை. விஜய் அரசியலுக்கு வர்றதை அவங்க அப்பா அம்மாவைத் தவிர அவரது மனைவி, மகன், மகள் என யாருக்குமே பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.

அதாவது பொன்முட்டை இடுற வாத்தை யாராவது கொல்வாங்களா? சினிமாவுல நடிச்சிக்கிட்டே அரசியலுக்கு வரலாம். எம்ஜிஆர் வரலையா? சிவாஜி, கமல் வரலையா? பாக்கியராஜ் வரலையா? அதாவது விஜய் எடுத்த முடிவுகள் எல்லாமே எதிர்மறையான முடிவுகளாகத் தான் இருக்கு. நேர்மறையான முடிவுகள் இல்லை.

Also read: வேண்டாம் வந்துராதீங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு வெளியில வந்தோம்… கண்ணீர்விடும் விஜய் ரசிகர்கள்

பத்திரிகைகாரங்களை சந்திக்கவே பயப்படுறாரு. அவர் வந்து பேசுனா சங்கீதா எப்படி இருக்காங்க? ஜேசன், திவ்யா எப்படி இருக்காங்கன்னு கேட்பாங்க. அதுக்குப் பயந்துக்கிட்டுத் தான் பத்திரிகைக்காரங்களை சந்திக்காம இருக்காரு.

2026 தேர்தல்ல போட்டியிடுறாரு. ஒருவேளை போட்டியிட்டு ஜெயிக்க முடியலைன்னா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு என்ன செய்வாருன்னு கேள்வி எழுகிறதுன்னு நிருபர் கேள்வி கேட்க அதற்கு பயில்வான் இப்படி பதில் சொல்கிறார். நரம்பில்லாத நாக்கு. எப்படி வேணாலும் பேசும். அடுத்து நடிக்க வருவேன்பாரு. அவருக்குத் தெரிஞ்ச தொழில் சினிமா தானே. கம்பேக்.

நடிகைகள் வந்து நான் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்னு சொல்வாங்க. அப்புறம் பசங்க 6ம் கிளாஸ் வந்தபிறகு அம்மா, அக்கா வேஷத்துக்கும், அண்ணி வேஷத்துக்கும் நடிக்க வர்றாங்க இல்லையா அப்படி வரலாம். என்ன 200 கோடி சம்பளம் தரமாட்டாங்க.

100 கோடி... 50 கோடின்னு கூட குறையா கொடுப்பாங்க. இல்லன்னா அவரே சொந்தப்படம் எடுக்கலாம். விஜயகாந்த் அளவுக்கு விஜயால் அரசியல் பண்ண முடியாது. கோட் படத்துல அவரோட பேரு காந்தி. அந்தப் படத்துல முன்னோட்டத்துல பார்த்தாலே என் புருஷனையே என்னால நம்ப முடியல. ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு வச்சிருக்காருன்ன ஒரு டயலாக் வருது.

goat

goat

விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு டயலாக் வரலாமா... இதுதானே பெண்கள்கிட்ட போய்ச்சேரும். அது மட்டுமல்லாம அவர் தண்ணி அடிக்கக்கூடாதுன்னு சொல்றாரு. ஆனா அடிக்கிறாரு.

விஜய் நேர்மையா இருக்கணும்னு சொல்றாரு. ஆனா பொம்பளைக்கிட்ட போறாரு. இப்படி ஒரு குழப்பமான படத்துல நடிச்சா எப்படி? அவரு இமேஜைப் பற்றிக் கவலைப்படல. அப்படி கவலைப்பட்டு இருந்தாருன்னா இப்படி ஒரு படத்துல நடிச்சிருக்க மாட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it