த்ரிஷாவை கூட்டிட்டு வந்து அது இல்லைனா எப்படி? வேஸ்ட் லைஃபா போன தக் லைஃப்..

by Rohini |   ( Updated:2024-01-24 11:49:10  )
trish
X

trish

actress trisha: ஒரு சரியான கம்பேக் பிறகு த்ரிஷாவின் காட்டில் அடைமழை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பல பெரிய பட்ஜெட் படங்களில் இப்போது ஹீரோயினாக த்ரிஷாதான் நடித்து வருகிறார். ஒரு பக்கம் விஜயின் லியோவில் மாஸ் காட்டிய த்ரிஷா இப்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்போது அடுத்ததாக கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் த்ரிஷா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமல் - மணிரத்தினம் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம்தான் தக் லைஃப். நாயகன் படத்திற்கு பிறகு இருவரும் இணையும் இந்தப் படத்திற்காக அதிக எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது.

இதையும் படிங்க: லோ பட்ஜெட் படமா? அதுவும் நானா? கனா இயக்குனருக்கு நடந்த விபரீதம்.. அன்னபூரணி என்னம்மா நீங்க?

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்றுதான் ஆரம்பமாகியிருக்கிறது. தக் லைஃப் படத்தில் கமலுடன் ஜெயம்ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா போன்ற பல முக்கிய நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள். கூடவே த்ரிஷாவும் நடிப்பதாக சொல்லப்பட ஒரு வேளை கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்பது போல செய்திகள் வெளியானது.

ஆனால் உண்மையில் தக் லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடியே இல்லையாம். த்ரிஷா வேறொரு நடிகருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிச்சயமாக கமலுக்கு இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் படத்திலும் கமலுக்கு ஜோடி இல்லாமல் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாகத்தான் விக்ரம் படம் ஹிட்டானது.

இதையும் படிங்க: இதுக்கு அந்த பணப்பெட்டியை எடுத்துப் போயிருக்கலாம்! அர்ச்சனாவுக்கு கொடுத்த 50 லட்சம் என்னாச்சு?

இப்பொழுது அதே பாணியில்தான் தக் லைஃப் படமும் தயாராக இருக்கிறது. கண்டிப்பாக ஆக்‌ஷன் கலந்த ஒரு செண்டிமெண்ட் படமாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Next Story