More
Categories: Cinema News latest news

ஒரே ஹீரோவுடன் நடிக்க வந்த 10 படங்களின் வாய்ப்பு! ஐய்யயோ வேண்டாண்டா சாமி என ஓடிய வாணிபோஜன்

Actress VaniBhojan:

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை வாணி போஜன். வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நடிக்கும் நடிகையாக இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்று வருகிறார். பெரிய பெரிய பட்ஜெட் நாயகியாகவும் இல்லை. ஆனால் நடிக்கிற படங்கள் அவருக்கு ஒரு நல்ல பேரை பெற்று தரும் படங்களாகவே அமைந்து வருகின்றன.

மிகவும் எதார்த்தமாக நடிக்கும் நடிகையாகவும் வாணி போஜன் இருந்து வருகிறார். குட்டி நயன்தாரா என்றெல்லாம் சொல்லியும் வருகிறார்கள். சின்னத்திரையில் இருந்து வந்து இன்று வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகிறார் வாணி போஜன். சினிமா துறையை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகையோ நடிகரோ லைம் லைட்டில் வந்து விட்டால் அவர்களை பற்றிய வதந்திகள் வரத்தான் செய்யும்.

இதையும் படிங்க: மைக் மோகனுக்கு அப்படி ஒரு வியாதியா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

அந்த வகையில் வாணிபோஜனை பற்றியும் சில வதந்திகள் வந்தன. பிரபல நடிகர் ஜெய்யுடன் நெருக்கமாக இருக்கிறார் வாணி போஜன் என்றெல்லாம் வதந்திகள் வந்தன. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் வாணிபோஜனிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதாவது ‘உங்களுக்காக ஒரு நடிகர் கதை கேட்ட பிறகு அவர் ஓகே செய்த பிறகுதான் நீங்கள் ஓகே சொல்கிறீர்களாமே’ என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த வாணி போஜன் இந்த மாதிரி காஸிப்களால் பல பேர் சம்பாதித்து வருகிறார்கள். பரவாயில்லை.

இதையும் படிங்க: பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் ஜெயிலர் பட நடிகை… ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!…

நீங்கள் சொல்லும் அந்த நடிகரின் 10 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பையே தட்டிக் கழித்திருக்கிறேன் என்று வாணி போஜன் கூறினார்.அதுமட்டுமில்லாமல் அப்போதான் புதியதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தேன். அதுவும் இஎம்ஐக்கு வாங்கியிருந்தேன். அந்த சமயத்தில் அந்த நடிகருடன் லிவ்விங் ரிலேஷனில் இருப்பதாக ஒருசெய்தி வெளியானது.

அப்போதெல்லாம் இதை படிக்கும் போது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது பழகிவிட்டது என வாணி போஜன் கூறினார். அந்த நிருபர் சொன்ன நடிகர் ஜெய்தான். ஒரு படத்தில் மட்டும்தான் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். ஆனால் அதற்குள் இருவருக்குள்ளும் இப்படி ஒரு நெருக்கம் என பல வதந்திகள் கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா… மீண்டும் ஒரு ரோலக்ஸா..?

Published by
Rohini