90ஸ் கிட்ஸ்சுக்கு கல்யாணம் தள்ளிப் போறது ஏன்னு தெரியுதா?… வனிதா சொல்ற பதிலைப் பாருங்க!

vanitha
தமிழ்த்திரை உலகில் பல கேள்விகளுக்கு வெளிப்படையாக மனதில் பட்டதைப் பேசக்கூடியவர்கள் வெகு சிலர்தான். அதில் பலரது கருத்துக்கள் சர்ச்சை ஆவதுண்டு. அந்த வகையில் வனிதா விஜயகுமார் ஒரு கருத்தைக் காமெடியாகச் சொல்லி இருக்கிறார். அதாவது 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் கல்யாணம் ஆகாம தள்ளித் தள்ளிப் போகுது. இதுக்கு என்ன காரணம்? அப்புறம் பிக்பாஸ், லிவிங் டுகெதர்னு பல விஷயங்களைப் பிரபல நடிகை வனிதா பேசியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
பிக்பாஸ்ல கோபம் வராம இருக்கவே முடியாது. இருந்தாலும் அதுல பிரயோஜனமே கிடையாது. பிக்பாஸ் வந்து கேம் ஆடுறது. அன்னைக்கு அது நிறைய பேருக்கு புரியாது. இன்னைக்கு பிக்பாஸ் நிறைய பேருக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு. எனக்கு கோபம்னு வந்தா என்னோட பைனான்சியல் டென்சன்கற ஒரு விஷயத்துலதான் நான் மனஅழுத்தம் ஆவேன். நான் கோபப்பட்டா மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
நவரசமும் எல்லாருக்கும் இருக்கும். இப்போ சுத்தமா கோபம் வர்றது இல்லை. என்னோட பெர்சனல்ல தேவையில்லாம யாராவது மூக்கை நுழைச்சா கோபம் வரும். எனக்கு 20 வயசுல தலைவலிதான் வரும். எதுக்குடா இப்ப கல்யாணம்னு? எங்க அப்பா, அம்மா வீட்டுல தொல்லை தாங்க முடியலன்னு கல்யாணம் பண்ணி மொத்தமா வாய்க்கால்ல போய் விழுந்துட்டேன் என்கிறார் வனிதா விஜயகுமார்.
அதே போல ஆங்கர் 90ஸ் கிட்ஸ்சுன்னாலே கல்யாணமே ஆகமாட்டேங்குது அப்படிங்கற மாதிரி ஒரு சிக்மா இருக்கு. 2கே கிட்ஸ்சுக்கு ஆகிடுது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டாங்க. அதற்கு வனிதா சொன்ன பதில் இதுதான்.
அவங்களுக்கு வந்து கிரகம் சரியில்ல. 80ஸ், 90ஸலயே செலக்ட் பண்ணி ஒரு கிரகத்தை மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டாரு ஆண்டவன். அந்தக் களஸ்திர ஸ்தானம் வந்து சரியில்லன்னு நினைக்கிறேன்னு சொல்லி சிரிக்கிறார். அது மட்டும் அல்லாமல் கல்யாணம் பண்ணினாலும் திரும்பி திரும்பி ஆகும்.
அதனால உங்க ரிஸ்க்ப்பா. ஒண்ணும் ஆகாது. ஆனாலும் திரும்பித் திரும்பி ஆகும்போல இருக்குது. சரியில்லன்னு சிரிக்கிறார். டைவர்ஸே மிகப்பெரிய விஷயமா இருந்தது. இப்ப எல்லாமே சாதாரணமாப் போச்சு. அப்படித்தான் லிவிங் டுகெதர். இதுல மட்டும்தான் அது உண்மையான லவ்வான்னு தெரியும். ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு சொல்வாங்க. அதுமாதிரி இந்த 3 மாசத்துக்கு மேல யாரும் நடிக்க முடியாது. இதெல்லாம் அந்தக் காலத்துல இல்லாததாலதான் நிறைய டைவர்ஸ் நடந்துருக்கு என்றும் தெரிவித்துள்ளார் வனிதா.