போத்திக்கிட்டு நடிச்சாலும் என்ன அப்படித்தான் பாத்தாங்க! எமோஷனலான விசித்ரா
Actress Vichithra: தமிழ் சினிமா உலகில் 90களில் கவர்ச்சியில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை விசித்ரா. ஐட்டம் நடனத்திற்கு ஆடி புகழ்பெற்றவர். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி இவர்கள் வரிசையில் விசித்திராவும் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு கல்யாணம், குழந்தைகள் என தன் வாழ்க்கையை மிகவும் பிஸியாக்கிக் கொண்ட விசித்ரா சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார்.
அதன் பிறகு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் .அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய உண்மையான முகம் என்ன? திரைக்கு பின்னாடி தன் வாழ்க்கை எப்படி இருக்கும்? மேக்கப்புக்கு முன் மேக்கப்புக்கு பின் என தன்னுடைய முகத்தை காட்டவே இந்த போட்டியில் கலந்து கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் விசித்ரா.
இதையும் படிங்க: உன் இடுப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. எல்லா ஆங்கிளிலும் காட்டி இழுக்கும் திவ்யா துரைசாமி…
இந்த நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் விசித்ராவுடன் தலைவாசல் விஜய் கலந்து கொண்டிருந்தார். அப்போது தலைவாசல் படத்தில் தலைவாசல் விஜய்க்கு ஜோடியாக விசித்ரா நடித்திருப்பார். ஆனால் அந்த படத்தில் பிராத்தல் கும்பல் தலைவி கதாபாத்திரத்தில் விசித்திரா நடித்திருப்பார். இதைப்பற்றி தலைவாசல் விஜய் அந்த மேடையில் கூறும்போது பிராத்தல் கும்பல் தலைவியாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் விசித்திரா யாரையும் நெருங்க விடாமல் யாரும் அவரை தொட்டு பேசாத அளவுக்கு மிகவும் கண்ணியமாக நடித்தார் என கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய விசித்ரா அந்த படத்தில் ‘போத்திகிட்டு தான் நடித்தேன். ஆனாலும் என்னுடைய கேரக்டர் அதனைத் தொடர்ந்து வரும் படங்களில் வேறு பிம்பமாக காட்டப்பட்டது. அது என்னை மீறி நடந்த விஷயம். இருந்தாலும் இனி வரும் காலங்களில் நான் நினைக்கிற அளவுக்கு குடும்ப பங்கான கதாபாத்திரம் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்றாலும் நான் நடிக்க தயார்’ எனக் கூறி விழா மேடைக்கு கீழே அமர்ந்திருந்த வெற்றிமாறனை பார்த்து ‘வெற்றிமாறன் சார் நான் மேக்கப் இல்லாமலும் நடிப்பேன். இதை நீங்கள் இருக்கும் போது இங்கு நான் கூறிக் கொள்கிறேன்’ என கூறினார். இதிலிருந்து மறைமுகமாக வெற்றிமாறன் படத்தில் வாய்ப்பு கேட்டிருக்கிறார் விசித்ரா.
இதையும் படிங்க: நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…