முதல் காட்சி ரஜினியுடன்!.. கடைசி காட்சி கமலுடன்! – முதல் படத்திலேயே ஜாம்பவான்களுடன் நடித்த நடிகை..

Published on: December 9, 2023
rajiin
---Advertisement---

Actress Viji Chandrasekar: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு அதே பேருடனும் புகழுடனும் இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். இருவரும் கிட்டத்தட்ட சினிமாவிற்காக ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். இன்றளவு வரையும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் ரஜினியின் படங்கள்தான் வசூலில் நம்பர் ஒன் இடத்தை பெற்று வருகிறது. இந்த  நிலையில் பிரபல குணச்சித்திர நடிகையான விஜி சந்திரசேகர் தன் சினிமா அனுபவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி மாறு வேஷத்தில் போய் பார்த்த சூர்யா படம்!.. என்ன சொன்னார் தெரியுமா?…

பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் விஜி சந்திரசேகர். அதன் பிறகு துணை நடிகையாக ஒரு சில படங்களில் நடித்தாலும் இன்று ஒரு அம்மா நடிகையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அம்மா நடிகைகளில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மற்றும் விஜி சந்திரசேகர்தான் முன்னனியில் இருக்கிறார்கள்.

அறிமுகமான முதல் படம் தில்லுமுல்லு. அந்தப் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருப்பார் விஜி சந்திரசேகர். இந்த அனுபவத்தை பற்றி கூறும் போது முதல் படத்திலேயே பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நடித்த பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது என கூறினார்.

இதையும் படிங்க: தப்பா பேசிய பப்லு… ஆனால் அவருக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.. மாஸ் தல நீங்க..!

அதுமட்டுமில்லாமல் அவருடைய முதல் ஷாட்டே ரஜினியுடன்தான் என்றும் கடைசி ஷாட் கமலுடனும் என்றும் கூறினார். தில்லுமுல்லு படத்தில் வக்கீலாக கடைசி காட்சியில் தோன்றியிருப்பார் கமல். அதனால் அறிமுகமான முதல் படத்திலேயே இருவருடனும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் பெருமைப் படுகிறேன் என விஜி கூறினார்.

அடிப்படையில் வக்கீலான விஜி சந்திரசேகர் அவ்வப்போது சிவில் சம்பந்தப்பட்ட ஃபைல்களை பார்ப்பாராம். ஆனால் நீதிமன்றத்தில் போய் வாதாடுவது  இல்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: நடிச்சது ஒரு சீன்! கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு – அஜித்தை பார்க்க சென்ற நடிகர்! என்ன சொன்னாரு தெரியுமா தல?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.