Connect with us
ajith

Cinema News

12 வருஷம் கழிச்சி அஜித்தை பார்க்க போன அந்த நடிகர்!.. ஏ.கே ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?..

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மதிக்கத்தக்க நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவரை பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். ஒரு சில நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறார்.

ரசிகர்களின் நலன் கருதியே ரசிகர் மன்றத்தை கலைத்தார். எந்தவொரு பப்ளிசிட்டியும் இல்லாமல் பல உதவிகளை செய்து கொண்டும் இருக்கிறார். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: உன்ன பாத்து மொத்த கண்ட்ரோலும் போச்சி!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் ஜான்வி..

கடந்த 10 நாள்கள் முன்பு அஜர்பைஜானில் இருந்து வந்த அஜித் நேற்று திரும்பவும் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றிருக்கிறார். அவர்  சென்னை விமான நிலையத்தில் நேற்று வந்த இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி ஒரு விஷயம் கூறியிருக்கிறார். அவர் அஜித்துடன் அட்டகாசம் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடேய் இந்த சீரியல் மட்டும் தான் எல்லா சரியா நடக்குது.. ஆனா ரொம்ப மொக்க போடுறீங்க மக்கா..! ஏன் இப்படி?

அதுவும் அந்தப் படத்தில் எஸ்.ஏ.வாக வருவார். அஜித்துடன் ஒரே ஒரு சீனில் மட்டும்தான் மீசை ராஜேந்திரன் வருவார். எப்பவும் இப்பவும் தூத்துக்குடி தல-னா அது அஜித்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அட்டகாசம் படத்திற்கு பிறகு 12 வருடம் கழித்துதான் அஜித்தை பார்த்தாராம் மீசை ராஜேந்திரன்.

அந்த நேரம் அஜித் வளசரவாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் மேல் போர்ஷனில் என்னை அறிந்தால் படத்தின் சூட்டிங்கில் இருந்தாராம். மீசை ராஜேந்திரன் வேறொரு படத்தின் சூட்டிங்கிற்காக கீழ் போர்ஷனில் இருந்தாராம். அஜித் இருப்பதை அறிந்த மீசை ராஜேந்திரன் இரவு சூட்டிங் முடிந்ததும் அஜித்தை பார்க்க போனாராம்.

இதையும் படிங்க: பாசமழையில் ரொம்ப உருகுறீங்களே… ராதிகாவும், பாக்கியாவும் அக்கா, தங்கச்சி மாதிரியாம்..! கோபி கேட்டா என்ன ஆகும்?

அஜித்தை பார்த்ததும் சார் என அழைக்க அதற்கு அஜித் ‘வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க? என்ன படம் சூட்டிங்? யார் டைரக்டர்? என்றெல்லாம் விசாரித்து கேப்டன் எப்படி இருக்கிறார்’ என்றும் கேட்டாராம். உண்மையிலேயே அஜித் வேற லெவல். நல்ல மனிதர் என மீசை ராஜேந்திரன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top