தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரஜினி, கமல் பீக்கில் இருக்கும் போதே சினிமாவிற்குள் நுழைந்து அவரது பாணியில் பல படங்களில் நடித்து கடைசியாக அவர்களுக்கு இணையான ஒரு நட்சத்திரமாக திகழ்ந்தார் விஜயகாந்த்.

ஏகப்பட்ட படங்கள் வசுலை அள்ளியது. அனைத்து முன்னனி நடிகைகளுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஓரளவுக்கு சினிமாவில் இடத்தை பிடித்த பிறகு எம்ஜிஆரை போலவே வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களுக்கும் தனக்கு இணையான உணவை பரிமாற வழிவகுத்தார்.
வாரி கொடுக்கும் வள்ளல் கேப்டனாகவே வாழ்ந்தார் விஜயகாந்த். ஆனால் இப்போது அவரின் நிலை அனைவருக்கும் ஒரு கவலையாகவே இருக்கிறது. சினிமாவில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர், பஞ்ச் டையலாக்குகளை அள்ளி வீசியவர், வாரி வழங்கிய வள்ளலாக இருந்தவர் தற்போது நடக்கக் கூடிய முடியாத நிலையில் இருக்கிறார்.

மேலும் ஒரு சில பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து அவ்வப்போது பார்த்தும் தங்களது வணக்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கமம் பட நடிகை விந்தியா சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்தை பற்றி கிண்டலாக பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
சங்கமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விந்தியா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். அரசியலிலும் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதாவை பற்றி விமர்சித்த விந்தியா,

‘மதுக்கடைக்கு தடை போட வேண்டும் என சொல்லும் பிரேமலதா முதலில் தன் வீட்டிற்கு தடைப் போட்டிருந்தால் விஜயகாந்தின் நிலைமை இப்படி ஆகியிருக்குமா? பழைய மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் பேத்தி வயதில் இருக்கும் நடிகைகளுடன் டூயட் பாடியிருப்பார், ஆர்யா, விஷாலுக்கே டஃப் கொடுத்திருப்பார்,’
இதையும் படிங்க : எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்க!.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்!..
‘இப்போ விஜயகாந்தை பேச சொல்லுங்க பார்ப்போம், பேச சொன்னால் வாயிலயே வயலின் வாசிச்சுட்டு இருக்காரு, முதலில் வீட்டை திருத்துங்க, அதன் பின் நாட்டை திருத்தலாம்’ என்று பல பேர் கூடிய மேடையில் விஜயகாந்தின் நிலையை கிண்டலடித்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.
