கங்கனாவை பாத்தா கன்னத்துல ரெண்டு வைப்பேன்!.. கடுப்பாகி கத்தும் பிரபல நடிகை...
பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் பல வருடங்கள் அவர் தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. ஆனால், ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான தலைவி படத்தில் நடித்திருந்தார். இப்போது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: அடடே அவங்களா!.. ஜவான் படத்தில் நயன்தாரா குரலை கெடுக்காம பார்த்துக் கொண்ட அட்லீ!..
கங்கனா எப்போதும் சர்ச்சையான விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகையாக இருப்பவர். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் திருமணமான பின்பும் இவரை காதலித்தார். ஆனால், திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, ஹிருத்திக் ரோஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவ்வப்போது பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பற்றி பேசி சர்ச்சையை உருவாக்கினார். மத ரீதியிலான கருத்துக்களை சொல்வார். பல இயக்குனர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்நிலையில், கங்கனாவை நேரில் பார்த்தால் கன்னத்தில் அறைவேன் என நடிகை ஒருவர் கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோபப்படுத்திய இயக்குனர்!. கடுப்பில் 58 பல்லவிகளை எழுதி கொடுத்த கண்ணதாசன்!.. அட அந்த படமா?!..
பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா-தான் அந்த நடிகை. அவர் கூறும்போது ‘கங்கனாவை ஒருமுறையாவது பார்க்க விரும்புகிறேன். அப்படி பார்க்கும்போது அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன். அவர் எங்கள் நாட்டை பற்றியும், பாகிஸ்தான் ராணுவம் பற்றியும் தவறான கருத்துக்களை பேசி வருகிறார். மற்ற நாட்டைப்பற்றி அவர் ஏன் பேச வேண்டும்?. உங்கள் நாட்டை பற்றி நீங்கள் பேசுங்கள். உங்கள் மீதான சர்ச்சை மற்றும் முன்னாள் காதலர் பற்றி பேசுங்கள்’ என தடாலடியாக பேசியுள்ளார்.
நவுஷீன் ஷா-வின் இந்த கருத்துக்கு கங்கனா என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அதான பழக்கதோஷம் போகுமா? ஜவான் இந்த தமிழ் படத்தின் காப்பி தானா? திருந்தாத அட்லீ!