புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்கிய நடிகைகள் பலர் உண்டு. அந்த வகையில் ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்பட்டு சில நடிகைகள் நடித்தனர். அதன்பிறகு என்ன காரணத்தாலோ அவர்கள் தொடர்ந்து ஜோடி போட முடியவில்லை. இந்த வகையில் ஒரு சில படங்களைத் தவிர எம்ஜிஆர் படங்களும் ஹிட் தான்.
இதையும் படிங்க… ஓடியாங்க.. ஓடியாங்க!.. ஊர்வசி நடித்து மிரட்டிய ஜே பேபி!.. எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..
பானுமதி அந்தக் காலத்தில் நம்பர் ஒன் நடிகை. இவர் கம்பீரமான நடிகை. மனதில் பட்டதை பட்டென்று சொல்லக்கூடியவர். நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும் படங்களில் இவரது நடிப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும்.
அடுத்ததாக சரோஜாதேவியை சொல்லலாம். இவர் எம்ஜிஆருடன் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ஜெயலலிதா எம்ஜிஆருடன் இணைந்து 29 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். மஞ்சுளா எம்ஜிஆருடன் 5 படங்களில் நடித்துள்ளார். லதா எம்ஜிஆருடன் 13 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்ஜிஆர் தான். அவரது படங்கள் வசூலைக் குவித்து விடும். இப்போது ஒரே ஒரு படத்தில் மட்டும் ஜோடியாக நடித்த நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
1958ல் எம்.என்.ராஜம் நாடோடி மன்னன் படத்தில் ஜோடியாக நடித்தார். 1959ல் தாய் மகளுக்குக் கட்டிய தாலி படத்தில் நடிகை ஜமுனா எம்ஜிஆருடன் ஜோடியாக நடித்தார். 1960ல் எம்ஜிஆருடன் வைஜெயந்தி மாலா பாக்தாத் திருடன் படத்தில் ஜோடியாக நடித்தார். 1961ல் மாலினி எம்ஜிஆருடன் நடித்த படம் சபாஷ் மாப்பிளே.
1962ல் வசந்தி எம்ஜிஆருடன் மாடப்புறா படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஜோடியாக நடித்தார். 1963ல் கொடுத்து வைத்தவள் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தவர் ஈ.வி.சரோஜா. இதே படத்தில் எல்.விஜயலெட்சுமியும் ஜோடியாக நடித்தார். பரிசு படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ராகினி நடித்தார்.
ஆனந்த ஜோதி படத்தில் தேவிகா எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். பணம் படைத்தவன் படத்தில் சௌகார் ஜானகி எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மேத்தா ரூன்கிரேட் என்ற தாய்லாந்து நடிகையும், சந்திகலாவும் ஜோடியாக நடித்தார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் பத்மபிரியா ஜோடியாக நடித்தார்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…