Connect with us

Cinema News

ஓடியாங்க.. ஓடியாங்க!.. ஊர்வசி நடித்து மிரட்டிய ஜே பேபி!.. எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..

பா. ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் நடிப்பு ராட்சசி ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் நடிப்பில் கடந்த மார்ச் 8ம் தேதி வெளியான ஜே. பேபி திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

மஞ்சுமெல் பாய்ஸ், ஆடுஜீவிதம் போல இந்த படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து உருவாக்கப்பட்ட படம் தான். மனநலம் சற்று குன்றிய நிலையில், வீட்டை விட்டு காணாமல் போன தாயை கொல்கத்தா வரை சென்று தேடி கண்டுபிடித்த இரு மகன்களின் வலி நிறைந்த கதை தான் இந்த ஜே. பேபி.

urvashi

இதையும் படிங்க: ஓவரா பேசிய இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த ரஜினிகாந்த்!… சூப்பர்ஸ்டார் அவ்வளவு கோபக்காரரா?!..

பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான இந்த படம் ப்ளூ ஸ்டார் படத்தை போல தியேட்டரில் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஊர்வசி சிறப்பாக நடித்துள்ள ஜே. பேபி படம் வெளியாகியிருக்கிறது. தியேட்டருக்குச் சென்று இந்த படத்தை பார்க்கத் தவறிய ரசிகர்கள் குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டுக்கு இந்த படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடையலாம்.

இதையும் படிங்க: அஜித்துக்கு வந்த வாய்ப்பு.. அசால்ட்டா நடிச்சு தேசிய விருதை தட்டி தூக்கிய நடிகர்! என்ன படம் தெரியுமா

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் தியேட்டரில் ஓடாத நிலையில், ஓடிடிக்கு வந்த பின்னர் அந்த படங்கள் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களும் பாராட்டு பத்திரங்களும் வந்த வண்ணமே உள்ளன.

ஜே பேபி படத்தை பார்த்து விட்டு எத்தனை பேர் ஓடிடியில் சிலாகிக்கப் போகின்றனர் என்பதை காத்திருந்து பார்க்க பா. ரஞ்சித் டீம் ஆவலுடன் இருக்கிறது. ரஜினிகாந்த் பற்றி பா. ரஞ்சித் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருடன் இருந்தவர் கலாய்த்து பேச அதைக் கேட்டுக் கொண்டு சிரித்த பா. ரஞ்சித்தை சோஷியல் மீடியாவில் பொளந்து வரும் நிலையில், பா. ரஞ்சித் தயாரித்த படம் ஓடிடியில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நன்றி கெட்ட ரஞ்சித்!.. ஏத்தி விட்டதுக்கு ரஜினிகாந்தை நல்லா செஞ்சிட்டாரு!.. கொதிக்கும் ரசிகர்கள்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top