Connect with us
ajith

Cinema News

அஜித்துக்கு வந்த வாய்ப்பு.. அசால்ட்டா நடிச்சு தேசிய விருதை தட்டி தூக்கிய நடிகர்! என்ன படம் தெரியுமா

Actor Ajith: அஜித்தின் வளர்ச்சி இந்த சினிமாவில் மிகவும் பிரமிப்பாகவே பார்க்கப்படுகிறது. எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக வந்து தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்து இன்று தமிழக ரசிகர்களின் மனதில் தல யாக ஒரு பெரும் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பகாலங்களில் தமிழ் ஒழுங்காக பேச தெரியவில்லை என ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானவர் அஜித்.

எத்தனையோ தோல்விகளை கண்டவர். இருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடம் இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்தளவுக்கு போராடி ஒரு டாப் நடிகராக உயர்ந்திருக்கிறார். 60 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் நெஞ்சங்களில் ஒரு நீங்கா இடம் பிடித்த அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக வெளி நாடு செல்ல இருக்கிறது.

இதையும் படிங்க: என்னடா இது அக்கா தம்பியை எல்லாம் ஜோடியா போடுறீங்க!.. டியர் படத்தை வச்சு செஞ்ச ப்ளூ சட்டை மாறன்!

இதனை அடுத்து ஆதிக் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் அஜித் தவறவிட்ட ஒரு படத்தின் சம்பவம் குறித்துதான் இப்போது சமூக வலைதளத்தில் செய்தியாக பரவி வருகிறது. அஜித் நடிப்பில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் மிஸ் ஆகியிருக்கின்றன. நேருக்கு நேர் படத்தில் முதலில் விஜய் ,அஜித் இவர்கள்தான் நடிக்க இருந்தது.

ஆனால் கால்ஷீட் காரணமாக அஜித் அந்த படத்தில் இருந்து விலக நேர்ந்தது. அதே போல் கஜினி படத்திலும் அஜித்தான் நடிக்க இருந்தது. அந்த நேரத்தில் நான் கடவுள் படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் இருந்ததனால் கஜினி படத்தில் அஜித்தால் நடிக்க முடியவில்லை . இப்படி நிறைய வெற்றிப்படங்களை அஜித் தவறவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கமல் படத்திற்கு உதவிய அஜித் – ஷாலினி!.. பல வருடங்கள் கழித்து சீக்ரெட் சொன்ன இயக்குனர்…

இதில் மற்றுமொரு படமும் இணைந்துள்ளன. செந்தில்குமார் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ‘தயா’. முதலில் இந்தப் படத்தில் அஜித்தான் நடிக்க இருந்ததாம். ஆனால் என்ன காரணமோ அவரால் நடிக்க முடியவில்லையாம். ஆனால் இந்தப் படத்திற்காக பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி தேசிய விருதை பெற்றிருக்கிறார். பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக மீனா இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top