Connect with us

latest news

என்னடா இது அக்கா தம்பியை எல்லாம் ஜோடியா போடுறீங்க!.. டியர் படத்தை வச்சு செஞ்ச ப்ளூ சட்டை மாறன்!

குட் நைட் படத்தின் லேடி வெர்ஷனாக உருவாகியுள்ள டியர் திரைப்படம் இந்த வாரம் வெளியான நிலையில், அந்த படமும் ஜிவி பிரகாஷ் படமாகவே சுமார் மூஞ்சி குமாராக வந்திருப்பதாக ரசிகர்கள் கடுப்பாகி உள்ள நிலையில், கடமைக்கு படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற வேலையை பார்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் படத்தை விட ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்குப்போய் ஜிவி பிரகாஷை ஹீரோவாக எப்படித்தான் போட்டார்களோ தெரியவில்லை. அக்காவும் தம்பியும் ஜோடி போட்டு நடித்தது போல இருக்கிறது என படத்தின் லீடு காஸ்டிங்கையே காலி செய்து விட்டார் ப்ளூ சட்டை மாறன்.

இதையும் படிங்க: அந்த இடத்துல பட்டன் இல்லயா செல்லம்!.. ராஷிகண்ணாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்!…

படத்தின் கதை தெரியாமல் இருந்தால் தான் சுவாரசியமாக இருக்கும். ஆனால் இவர்களே ட்ரைலரில் மொத்த கதையும் சொல்லி விட்ட நிலையில், படத்தைப் பார்க்கும்போது எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்கிறது.

மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரெக்கார்டு பிரேக்கிங் செய்து வரும் நிலையில், கோலிவுட் படங்கள் ஷோபிரேக்கிங் செய்து வருகின்றன. ஒரு படத்தைப் பார்க்க 10 பேருக்கு மேல் டிக்கெட் வாங்கவில்லை என்றால், அந்தக் காட்சி ரத்தாகிவிடும் என்பதுதான் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலையாக மாறி இருக்கிறது என வெளுத்து வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: விடாமுயற்சியை விட்டுத்தள்ளுங்க.. குட் பேட் அக்லி சூப்பர் அப்டேட் தெரியுமா?.. பாலிவுட்டே இறங்குது!..

ரயில் ஓரங்களில் வசிப்பவர்கள் எல்லாம் அந்த சத்தத்துக்கு சில நாட்களில் செட்டாகி வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். குறட்டை சத்தமெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது. 10 நாட்கள் தான் அவர்களுடன் பழகிவிட்டால் அதன் பின்னர் அந்த சத்தம் கேட்கவில்லை என்றால் தூக்கமே வராது.

ஏதாவது பத்திரிக்கை செய்தியில் குறட்டை விட்டதால் கணவன் மனைவி விவாகரத்து என்பதை படித்துவிட்டு இப்படி ஆளாளுக்கு படம் எடுப்பதெல்லாம் வீண் வேலை என தனது விமர்சனத்தில் டியர் படத்துக்கு முழு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

இதையும் படிங்க: எல்லாத்தையும் கொடுத்துட்டு தெருவுல நிக்கவா?!.. மனுஷனை இப்படி கோபப்பட வச்சிட்டாங்களே..

google news
Continue Reading

More in latest news

To Top