Gossip: நடிப்பதற்கு காசு வாங்கிட்டு கம்பி நீட்டிய நடிகை!.. அட பாவமே!...

#image_title
தயாரிப்பாளர் ஒருவரிடம் காசுவாங்கிவிட்டு நடிக்காமல், பிரபல நடிகை கம்பி நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குற்றங்களை செய்யும் மனிதனை குறிக்கும் இரண்டெழுத்து படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. அறிமுகம் சரியாக அமையாவிட்டாலும் முன்னணி இயக்குனர், நடிகருடன் கரம் கோர்த்து நட்புக்கு சொந்தமான படத்தில் நடித்தார்.
அந்த படத்தில் நடித்த நடிகைக்கு அவரை புகழும் விதமாக பாடலும் வைக்கப்பட்டது. பின்னர் தமிழில் பெரிதாக ஒரு ரவுண்டு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அக்கட தேசத்திற்கு சென்ற நடிகை அங்கேயே டேரா போட்டு தங்கி செட்டில் ஆகி விட்டார்.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: இந்த வாரம் ‘டபுள்’ எவிக்சன்… வெளியேற போவது இவங்களா?..
அதோடு திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையும் பெற்றுக்கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் இருந்து அவர் ஏன் திடீரென காணாமல் போனார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில் தமிழ் தயாரிப்பாளரிடம் கைநீட்டி சுமார் 40 லட்சம் ரூபாயை வாங்கிய பின், நடிக்காமல் நடிகை கம்பி நீட்டி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஷயம் தயாரிப்பாளர்கள் சங்கம் வரை செல்ல, அவருக்கு தமிழ் படங்களில் தடை விதித்துள்ளனர். ஆனால் ஏமாந்த தயாரிப்பாளர் யாரென்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதை கேள்விப்பட்ட பிரபலங்கள் பலரும் யாருப்பா அந்த தயாரிப்பாளர் என ரூம் போட்டு யோசித்து வருகின்றனர். அக்கட தேசத்தின் தயாரிப்பாளர் தான் இந்த உண்மையை உடைத்திருக்கிறார். என்றாலும் பெயர் இதுவரை பரம ரகசியமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: Biggboss Tamil: இந்த சீசனோட ‘வெஷ பாட்டில்’ யாருன்னு தெரியுமா?