Connect with us

Cinema History

15 வயசுலையே சினிமாவில் ஹீரோயின் ஆன நடிகைகள்!. யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை விடவும் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு வருவது என்பது தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நடிகை நயன்தாரா கூட சிறுவயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்தவரே ஆவார். ஆனால் மிகச்சிறு வயதில் 14 அல்லது 15 வயதிலேயே நடிகைகள் சினிமாவிற்கு வந்துள்ளனர். இப்போதைய காலகட்டத்தில் அப்படி சிறுவயதிலேயே பெண்கள் கதாநாயகிகளாக அறிமுகமானால் அது மிக பெரும் சர்ச்சை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு விதிமுறைகள் இப்போது மாறியுள்ளன. ஆனால் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களிலும், கமல் ரஜினி காலகட்டத்திலும் சினிமாவில் பல நடிகைகள் சிறுவயதிலேயே கதாநாயகியாக நடித்துள்ளனர்.

பல நடிகைகள் இப்படி நடித்திருக்கும் பொழுதும் நாம் சில நடிகைகளை மட்டும் இப்போது பார்க்க போகிறோம் அதில் முதலாவது நடிகை ஜெயலலிதா.

நடிகை ஜெயலலிதா:

ஜெயலலிதா தனது பதினைந்தாவது வயதிலேயே இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதிலும் 15 வயதிலேயே அந்த திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார் ஜெயலலிதா. அதன்  பிறகு 17 ஆவது வயதில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஜெயலலிதாவை அடுத்து தமிழ் சினிமாவிற்கு குறைந்த வயதில் கதாநாயகியாக அறிமுகமான மற்றொரு நபர் ரேவதி.

நடிகை ரேவதி:

Revathi

Revathi

ரேவதி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே அவரைப் பார்த்த பாரதிராஜா, அவரை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க ஆசைப்பட்டார் அவரையும் கிட்டத்தட்ட 15 வயதிலேயே மண்வாசனை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

மீனா:

அதேபோல நடிகை மீனாவும் மிகவும் சின்ன வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பே அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடித்து இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மீனா.

என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும் போது மீனாவிற்கு கிட்டத்தட்ட 15 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் படத்தில் நிஜ வயதை விட அதிக வயதுடைய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சோலையம்மாள் என்கிற அந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் மீனா.

ரம்யா கிருஷ்ணன்:

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அவர் நடித்த திரைப்படங்களில் படையப்பா பாகுபலி போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை ஆகும். 1985 இல் வந்த வெள்ளை மனசு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஒய்.ஜி மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் டிஸ்கோ சாந்தி, கவுண்டமணி போன்றவர்களும் இந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை ஆனால் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ரம்யா கிருஷ்ணனுக்கு 14 வயதே நிறைவடைந்து இருந்தது.

இவர்கள் அனைவருமே சின்ன வயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் அதன் பிறகு சினிமாவில் பெரும் இடத்தை இவர்கள் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க:நாயகன் படத்தில் மணிரத்னம் செய்த சொதப்பல்கள்!.. ரத்த கண்ணீர் வடித்த தயாரிப்பாளர்…

google news
Continue Reading

More in Cinema History

To Top