Connect with us

Cinema History

நாயகன் படத்தில் மணிரத்னம் செய்த சொதப்பல்கள்!.. ரத்த கண்ணீர் வடித்த தயாரிப்பாளர்…

1985 ஆம் ஆண்டு வெளிவந்த பகல் நிலவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்தினம். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலம் முதலே மணிரத்தினம் ஒரு தனித்துவமான இயக்கும் திறனை கொண்டிருந்தார்.

அதனால் அவரது திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. 1985இல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மணிரத்தினம், 1986 ஆம் ஆண்டே மௌன ராகம் திரைப்படத்தை இயக்கினார்.

மௌன ராகம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் இயக்கிய நாயகன் படம் அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு பிறகு அதிக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார் மணிரத்தினம். முக்தா ஸ்ரீனிவாசன் என்பவர்தான் நாயகன் திரைப்படத்தை தயாரித்தவர்.

அவரது மகன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது நாயகன் படத்தில் நடந்த பல விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறும்போது நாயகன் படத்தில் பல சொதப்பல்களை செய்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம். அப்போது பட தயாரிப்பாளர்கள் ஒரு விதிமுறையை கடைப்பிடித்துள்ளனர்.

நஷ்டம் ஏற்படுத்திய இயக்குனர்:

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு 20 லட்சம் சம்பளம் கொடுத்தால் அந்த படம் ஒரு கோடிக்காவது ஓடினால்தான் படம் வெற்றி படம் என்று ஒப்புக்கொள்ளப்படும். அதாவது நடிகருக்கு கொடுத்த சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிக லாபத்தை திரைப்படம் கொடுத்தாக வேண்டும். படத்தின் பட்ஜெட்டும் அப்படித்தான் அமைக்கப்படும்

Nayagan

இப்படியாக நாயகன் படத்திற்கும் ஒரு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மொத்த படத்திற்கான கால்ஷீட் 30 நாட்கள் என ஒதுக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிக தொகையை செலவு செய்து படத்தை எடுத்து முடித்தார் மணிரத்தினம். அதேபோல இறுதியாக மொத்த படமும் சேர்த்து ஆறு மணி நேரம் இருந்தது.

இதனை அடுத்து தயாரிப்பாளர் தமிழில் உள்ள எட்டு முக்கிய இயக்குனர்களை அழைத்து அவர்களை கொண்டு படத்தை கட் செய்து மூன்று மணி நேரத்திற்குள்ளாக கொண்டு வந்துள்ளனர். எனவே நாயகன் திரைப்படம் தயாரிப்பாளரை பொறுத்தவரை ஒரு வெற்றிப்படம் கிடையாது அது அதிக செலவை எடுத்துக் கொண்ட ஒரு திரைப்படம் என தயாரிப்பாளரின் மகன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சத்யராஜ் ரகசிய தொடர்பில் இருந்த நடிகைகள்! பகிரங்கமாக கூறிய பயில்வான் ரெங்கநாதன்

google news
Continue Reading

More in Cinema History

To Top