முன்னணி நாயகிகளுக்கு நோ.. அந்த இன்ஸ்டா பிரபலத்தினை நாயகியாக்கிய அதர்வா… அடடா!

Adharva: தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சீரியலில் இருந்தும், சோசியல் மீடியாவில் இருந்தும் நாயகிகள் வருவது வழக்கமாக இருக்கிறது. அதில் புது வரவாக அதர்வாவின் அடுத்த படத்தில் நாயகியாக இருக்கிறார் பிரபல இன்ஸ்டால் செலிப்ரிட்டி.

90களில் நாயகனாக வலம் வந்த முரளியின் மகன் என்று அறிமுகத்துடன் பாணா காத்தடி படத்தில் நடித்தவர் அதர்வா முரளி. முதல் படமே சமந்தாவுடன் ஜோடியாக நடித்திருப்பார். படமும் ஓரளவு நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.

இதையும் படிங்க: ரூம் விஷயத்தில் புதிய வெடியை கிள்ளி போட்ட பாட்டி… அடுத்த ரவுண்ட் என்ன நடக்குமோ?

இப்படத்தை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படத்திற்காக அவருக்கு சில விருதுகளும் கிடைத்தது. ஆனால் இப்படங்களைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியான மற்ற எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. சரியாக கதையை தேர்வு செய்ய முடியாமல் திணறி வந்தார்.

கிட்டத்தட்ட நடிக்கும் எல்லா கதைகளும் ப்ளாப்பாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் அமைய தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் அதர்வா முரளி நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கி இருக்கிறது. லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்க இருக்கிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சரான நிஹாரிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிகிறது.

இதையும் படிங்க: ட்ராமா போடும் ஈஸ்வரி.. கடுப்பில் ராதிகா மற்றும் கமலா… குழம்பி போய் நிற்கும் கோபி! தேவைதான்…

 

Related Articles

Next Story