பெரிய புளியங்கொம்பால பிடிச்சிருக்காரு! பிரபல நடிகரின் மகளை கரம் பிடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

by Rohini |
adhik
X

adhik

Adhik Ravichandran: மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் அடிப்படையில் இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்குள் வந்திருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித்தின் ஆலோசனை தான் பெரிய பூஸ்டர் போல மாறியிருக்கிறது. அஜித் சொன்ன வார்த்தையை வைத்துக் கொண்டுதான் தனது அடுத்தகட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய், அஜித்தெல்லாம் ஓரமா போ!. புஷ்பா 2-வுக்கு அல்லு அர்ஜூன் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?..

அதன் மூலம் கிடைத்த வெற்றிதான் மார்க் ஆண்டனி என்றும் அதற்காக அஜித்திற்கு நான் நன்றி சொல்கிறேன் என்றும் பல மேடைகளில் கூறி வந்தார். இதற்கு இன்னும் ஒரு படிமேலாக அஜித்தின் 63வது படத்தையும் ஆதிக் தான் இயக்க இருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அஜித் - ஆதிக் இணையும் படத்தை விடுதலை பட தயாரிப்பாளரான எல்ரெட் தான் தயாரிக்கிறார் என்ற செய்தியும் வெளியாகின. ஆனால் இப்போது அதி வேறொரு நிறுவனத்திற்கு கைமாறியதாக தெரிகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் அஜித்தின் 63வது படத்தை தயாரிக்க இருக்கிறதாம்.

இதையும் படிங்க: ரஜினி – கமல் பட டைட்டில்களை வைத்தே வசனம் எழுதிய விசு! எந்தப் படம் தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க

இதற்கிடையில் ஆதிக்கின் திருமணம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறதாம். இவரின் திருமணம் காதல் திருமணமாம். அதுவும் பிரபல நடிகர் பிரபுவின் மகளைத்தான் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்ய இருக்கிறாராம்.

பிரபுவின் மகள் ஒரு காஸ்டியூம் டிசைனராம். இருவரும் ஒரே ஃபீல்டில் இருப்பதால் இருவீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். டிசம்பர் 25 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: தாக்கியவர் மீது புகார் கொடுக்காத வனிதா..! என்ன பிலிம் காட்றீங்களா? பயில்வான் ரங்கநாதன் பகீர் கேள்விகள்..!

Next Story