தாக்கியவர் மீது புகார் கொடுக்காத வனிதா..! என்ன பிலிம் காட்றீங்களா? பயில்வான் ரங்கநாதன் பகீர் கேள்விகள்..!
Vanitha Vijayakumar: நடிகை வனிதா விஜயகுமார் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவால் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரை விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா. அவரின் மூத்த மகள் தான் வனிதா. சில படங்களில் நடித்தவரால் பெரிய உச்சத்தினை அடைய முடியவில்லை. பின்னர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து இருவருக்கும் விவகாரத்து, சொத்து பிரச்னையில் நடு வீதியில் சண்டை என வனிதாவின் வரலாறு தெரிந்தவர்கள் அதிகம்.
இதையும் படிங்க: ஜெமினி கணேசன் படத்துக்கு சம்பளத்தை குறைக்க சொன்ன என்.டி.ராமராவ்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?…
இந்த கண்டெண்ட்டை டிவியில் வந்து கொடுமா எனக் கூறி மூன்றாவது சீசனுக்குள் தூக்கி போட்டது விஜய் டிவி. பிக்பாஸை சண்டை களமாக மாத்தி தேவையில்லாததுக்கு பிரச்னை செய்த வனிதாவை ரசிகர்கள் பாதியில் வெளியேற்றினர். இதை தொடர்ந்து மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் ரசிகர்கள் அமைதியாகாமல் எலிமினேட் செய்ய வைத்தனர்.
இதனால் அவர் பிக்பாஸ் தமிழை ரிவியூ செய்ய களத்தில் இறங்கினார். கடந்த சீசன் எல்லாம் அவர் ரிவியூ பெரிதாக பேசப்படவில்லை. இந்த சீசனில் மகளை உள்ளே அனுப்பி விட்டு வெளியில் அவர் பேசும் பேச்சுக்கள் அய்யோடா ரகம் தான். அதிலும் கமல் மீது கேஸ் கொடுப்பேன் என ஒரு போடு போட்டார்.
இந்நிலையில் நேற்று எக்ஸ் தளத்தில் நான் நடுராத்திரி 1 மணிக்கு என் தங்கை வீட்டில் இருந்த போது ரெட் கார்ட் கொடுக்கிறீங்க? அதுக்கு நீ சப்போர்ட் என ஒருவர் என்னை தாக்கி விட்டதாக புகைப்படத்துடன் போஸ்ட் போட்டார். இந்த விஷயம் பரபரப்பாகியது. ஆனால் அவரே என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். எனக்கு தனிமை வேண்டும் எனவும் போஸ்ட் போட்டார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எல்லாத்துக்கும் முதல் படம்!. சத்தமில்லாமல் எம்.ஜி.ஆர் செய்த சாதனை!..
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேசி இருக்கும் வீடியோ வைரலானது. அதில், ஒருவர் நம்மை தாக்கிவிட்டால் அவர் மீது புகார் கொடுப்பது தான் வழக்கம். விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து எல்லா பிஆர் ஓக்களுக்கும் வனிதா எண்ணை கேட்டு கால் போய் இருக்கிறது.
இது உண்மையிலேயே ஷோக்காக நடந்ததா? இல்லை சொந்த காரணங்களுக்கு நடந்த விஷயத்தினை புகார் கொடுத்தால் பிரச்னை ஆகிவிடும் என மறுக்கிறீர்களா? தெரிந்தவர்கள் செய்ததை சொன்னால் விவகாரம் பெரிதாகிவிடும் என மறைக்கிறாரா எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் டைம் சொல்றேன்! மனசு உடைஞ்சே போயிருச்சு - இயக்குனரால் வாழ்க்கையை இழந்த பாலாஜி முருகதாஸ்