விக்கிக்கு நடந்தது நமக்கும் நடந்திருமோ? ‘ஏகே 63’ க்காக பக்கா ஸ்கெட்ச் போட்டு வேலையை ஆரம்பிக்கும் ஆதிக்

Published on: January 16, 2024
ajith
---Advertisement---

Adhik Ravichandran: அஜித்தை வைத்து அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ஏற்கனவே அன்பானவன் அசராதவன் அடங்காதவன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களை இயக்கியிருக்கிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அந்தப் படத்தில் இருந்துதான் அஜித்துடன் நெருக்கம் ஏற்பட்டு அவருடைய அறிவுரையின் படி மார்க் ஆண்டனி என்ற ஒரு தரமான படத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க: பைத்தியமா இந்த பையன்?!.. டி.எம்.எஸ்சை கலாய்த்த நபர்.. வரிஞ்சி கட்டிகொண்டு வந்த பி.யூ.சின்னப்பா…

அந்தப் படத்தில் அஜித்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டைட்டில் கார்டில் அஜித்தின் பெயரையும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் அஜித்தின் 63வது படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்தது. இப்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் சத்தமே இல்லாமல் ஏகே 63க்கான பூஜையை நேற்று ஆதிக் ரவிச்சந்திரனுடன் படக்குழு போட்டிருக்கிறது. அந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ்தான் தயாரிக்கிறார்கள். அதற்காக நேற்று பூஜையை முடித்த கையோடு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக அலுவலகம் ஒன்றை அமைத்திருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: அந்த படத்துல நடிச்சதுக்கு எனக்கு கிடைச்சது இதுதான்!… ஃபீலிங்ஸ் காட்டும் நாசர்..

அங்கு வைத்துதான் கதை ஆலோசனைகள் எல்லாம் நடக்க இருக்கிறதாம். விறுவிறுப்பாக ஏகே 63க்கான வேலைகள் தடபுடலாக ஆரம்பித்திருக்கின்றனர். அதற்கு காரணம் விடாமுயற்சி படம் ஆரம்பித்த போது விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கும் வந்துவிட கூடாது என்று கருதி கூட ஆதிக் அவசர அவசரமாக அவருடைய வேலையை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.