அதர்வா முரளி தம்பிக்கு ஜோடியான அதிதி ஷங்கர்!.. பில்லா இயக்குநர் படத்தோட டைட்டில் தெரியுமா?..
அஜித்தை வைத்து பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் பாலிவுட்டுக்கு சென்று மிகப்பெரிய இயக்குனராக மாறியுள்ள நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதர்வா முரளியை தொடர்ந்து அவரது தம்பி ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகி வரும் படத்தை இவர்தான் இயக்கி வருகிறார்.
அந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்து வரும் நிலையில் அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு டைட்டிலுடன் தற்போது வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிப்பு நிறுவனம் அதன் பின்னர் எந்தவொரு படத்தையும் தயாரிக்கவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு தற்போது தரமான பதிலடியை கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பல கெட்டப்புகளில் கலக்கும் உலக நாயகன்!. சும்மா அடிப்பொலி!.. இந்தியன் 2 டிரெய்லர் வீடியோ இதோ!…
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் காதல் படமாக உருவாகி வரும் படத்துக்கு ‘நேசிப்பாயா’ என டைட்டில் வைத்து அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். ஆனால், ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கரின் லுக்கை ரிவீல் செய்யாமல் வெறும் டைட்டில் மட்டுமே வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
மாவீரன் படத்தை முடித்த உடனே அதிதி ஷங்கர் இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், ஒட்டுமொத்த படமும் முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: என்ன ஒரு எளிமை! குல தெய்வ வழிபாட்டை முடித்த அர்ஜூன் மகள் மற்றும் மருமகன்.. வைரலாகும் வீடியோ
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், அவரது தம்பியை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் புல்லட் படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதை போலவே ஆகாஷ் முரளியும் ஹீரோவாக விரைவில் தமிழ் சினிமாவுக்கு வரவுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனராக மாறியுள்ள விஷ்ணுவர்தன் தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய நிலையில், பாலிவுட்டில் ஷேர்ஷா படத்தை இயக்கி தேசிய விருது வென்றார். இந்நிலையில், அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி வந்து என்ன செஞ்சாங்க? விஜய் அரசியலில் இருக்கும் பவரே வேற.. பொங்கிய ஷியாம்