சூர்யாவால் அதிதிக்கு வந்த வினை… விலகிப்போன டாப் நடிகர்கள்… இப்படி ஆகிடுச்சே??
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், “விருமன்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே கிராமத்து நாயகியாக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதிதி.
“முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துவிட்டார்” என ரசிகர்கள் பாராட்டி வந்தனர். மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மதுரவீரன்” என்ற பாடலையும் பாடினார். இதுமட்டுமல்லாது அதிதி ஷங்கர் சொல்லும் மொக்கை ஜோக்குகளும் மிகப்பிரபலம் ஆகிவிட்டது. எந்த விழாவில் கலந்துகொண்டாலும் ஜோக் சொல்லும்படி பலரும் கேட்கின்றனர்.
முதல் படத்திலேயே இவ்வளவு பிரபலமானாலும் ஒரு பக்கம் சர்ச்சையும் கிளம்பியது. அதாவது “மதுரவீரன்” பாடலை முதலில் ராஜலட்சுமி தான் பாடினார் எனவும் அதன் பிறகு தான் யுவன் ஷங்கர் ராஜா அதிதி ஷங்கரை பாடவைத்தார் எனவும் செய்திகள் பரவியது. “ஷங்கரின் மகள் என்பதால்தான் இவ்வாறு செய்தார்கள்” என பலரும் விமர்சித்து வந்தனர்.
அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் “மாவீரன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த நிலையில் அதிதி ஷங்கர் வாய்விட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது அதிதி ஷங்கர் ஒரு பேட்டியில் “உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என நிரூபர் கேட்டிருக்கிறார். அதற்கு அதிதி “சூர்யா தான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என கூறியிருக்கிறார். இது தான் தற்போது அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளதாம்.
அதாவது தமிழின் மாஸ் மற்றும் டாப் நடிகர்கள் அதிதி மேல் செம காண்டில் இருக்கின்றனராம். ஆதலால் தங்களது திரைப்படங்களில் அதிதி ஷங்கருக்கு வாய்ப்பளிக்க மறுப்பதாக சில தகவல்கள் வருகின்றன. எனினும் “ஷங்கர் நினைத்தால் நடக்காதது உண்டா?” எனவும் சிலர் கூறிவருகின்றனர்.