‘கோட்’ படத்தால் கொண்டாட்டம்.. 14 வருஷம் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் விஜய்!
Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய்க்கு என கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அவர்களை நம்பித்தான் இன்று அரசியலிலும் கால்பதிக்க வருகிறார் விஜய். அவருடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்துதான் துணிச்சலாக அரசியலில் குதித்திருக்கிறார். ரஜினி செய்ய முடியாததை விஜய் துணிச்சலோடு செய்ய களமிறங்குகிறார்.
அதுவும் மிகவும் பீக்கில் இருக்கும் போதே இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தைரியமாக சொல்லும் விஜயை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இதிலிருந்தே மக்களுக்கு பணியாற்றும் விஜயின் எண்ணம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஒரு படத்திற்கு 200 கோடி வரை வாங்கும் விஜய் அதை இன்று சாதாரணமாக உதறி தள்ளியிருக்கிறார் என்றால் இது எளிதான காரியம் இல்லை.
இதையும் படிங்க: கோட் படத்தின் வில்லன்… கேமியோ ரோலில் முன்னணி நாயகி… அப்டேட்களால் திணறடித்த படக்குழு!…
இப்போது விஜய் கோட் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக அவருடைய 69 வது படத்தின் இயக்குனரை தேர்வு செய்த பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பும் விரைவாக தொடங்கிவிடும். இந்த இரு படங்களுக்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார். முழு நேர அரசியல்வாதியாகவே பயணம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்களை விட பல மடங்கு ரசிகர்கள் கேரளாவிலும் விஜய்க்கு இருக்கிறார்கள்.
மோகன்லால், மம்மூட்டியையே மிஞ்சும் ரசிகர்கள் விஜய்க்கு இருக்கிறார்கள். முதலிடத்தில் விஜய்,இரண்டாவது இடத்தில் சூர்யா அடுத்த இடத்தில்தான் ப்ரித்விராஜ் என்று சொல்கிறார்கள். அந்தளவுக்கு கேரள ரசிகர்கள் விஜயை விரும்பி வருகின்றனர். அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விஜயின் கோட் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில்தான் அடுத்தவாரம் தொடங்க இருக்கிறதாம்.
இதையும் படிங்க: ரஜினியின் கிளாசிக் படத்தில் நடிக்கவிருந்த கமல்!.. அதுவும் அந்த வேடத்தில்!.. தெரியாம போச்சே!..
இதன் மூலம் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு காவலன் படத்திற்கு பிறகு விஜயின் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புதான் கேரளாவில் நடக்க இருக்கிறதாம். இது கேரளா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்திருக்கிறது.