21 வருஷம் கழிச்சு விட்டத மீண்டும் கையிலெடுக்கும் டி.ஆர்! இனிமே டப்பு டுப்பு டப்புதான்

by Rohini |   ( Updated:2023-09-06 09:43:10  )
tr
X

tr

தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே ஒரு சில பிரபலங்களை நம்மால் மறக்கவே முடியாது. அந்தளவுக்கு சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். மேலும் சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் எல்லாமுமாக இருந்த ஒரு பிரபலம்தான் டி.ராஜேந்திரன்.

ஒரு இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக, இசையமைப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக, கதாசிரியராக என பன்முகக் கலைஞராக திகழ்ந்து வந்தார் டி.ராஜேந்திரன்.

இதையும் படிங்க : இனிமே சோலோ வேலைக்கு ஆவாது! விஜயிடம் சரணடைந்த போட்டி நடிகர் – களைகட்டும் ‘தளபதி68’

இவரின் படங்கள் பொதுவாக செண்டிமெண்ட்டாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து படங்களை இயக்கிய டி.ஆர் அதில் வெற்றியும் கண்டார். மேலும் தனது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தன் படத்திலேயே அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து பல படங்களை இயக்கி வந்த டி.ஆர் ஒரு கட்டத்திற்கு மேலாக சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை. சமீபத்தில் கூட அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அமெரிக்காவில் தான் மருத்துவம் பார்த்தார்கள். அதிலிருந்து குணமாகி டி.ஆர் இப்போது நலமாக இருக்கிறார்.

இதையும் படிங்க : சிக்குன்னு இருக்கு உடம்பு!.. ஹைகிளாஸ் அழகை காட்டி இழுக்கும் ஜெயிலர் பட நடிகை!..

இந்த நிலையில் கிட்டத்தட்ட 21 வருஷம் கழித்து மீண்டும் இசையமைக்க வந்திருக்கிறார் டி.ஆர்.பண்ணாரி அம்மன் படத்திற்கு பிறகு அவர் இசையமைப்பதையே நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு எப்படி திடீரென இந்த முடிவை எடுத்தார் என்று கேட்டால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம்.

அவர் இசையமைக்கும் படத்தின் பெயர் ‘ நான் கடைசி வரை தமிழன்’ என்பதாம். இந்தப் படத்தின் தலைப்பில் தமிழன் என்று இருப்பதால்தான் இசையமைக்க ஒப்புக் கொண்டாராம் டி.ஆர். இதை அந்தப் பட பூஜையின் போது கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: எங்களுக்கு முதல்ல பணம் கொடுங்க!. அப்புறம் உதவி பண்ணலாம்!.. விஜயை கலாய்க்கும் தயாரிப்பாளர்…

Next Story