23 வருஷம் கழிச்சு விஜயால் கிடைச்ச பெருமைதான் இது! என்ன ஒரு மேஜிக்? பெருமிதத்தில் பிரபலம் சொன்ன தகவல்

by Rohini |   ( Updated:2023-10-29 10:46:17  )
vijay
X

vijay

Leo Vijay: விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான படம் தான் லியோ. இந்தப் படத்தில் விஜயுடன் சேர்ந்து த்ரிஷா,அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வேட்டையாடி வருகிறது. இது நாள் வரைக்கும் 450 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது லியோ. இந்த நிலையில் லியோ படத்தினால் படத்தில் நடித்தவர்களுக்கு பெருமையா என்று தெரியாது.

இதையும் படிங்க: ஹாஸ்பிடலில் நடந்த மெடிக்கல் மாஃபியா! ஒரு ட்ரையலுக்கு 25 லட்சமா? விக்ரமன் மனைவிக்கு நடந்த அநியாயம்

ஆனால் அந்தப் படத்தில் காஃபி ஷாப்பில் விஜய் ஆடும் அந்த பிரபுதேவா பாடலுக்குத்தான் பெருமை. 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏழையின் சிரிப்பில் அமைந்த பாடல்தான் கரு கரு கருப்பாயி என்ற பாடல். மிகவும் பெப்பியான இந்தப் பாடலை உன்னி மேனன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த உன்னிமேனன் இந்த லியோ படத்தில் அமைந்த தனது பாடல் குறித்து மிகவும் பெருமையாக பேசியிருக்கிறார். 23 வருஷம் கழிச்சு இந்தப் பாடலை லியோ படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் என்னை இன்னமும் இந்த மக்கள் நியாபகம் வச்சிருக்காங்களா? என்றுதான் யோசிக்க தோன்றுகிறது.

இதையும் படிங்க: SK 21 படத்திற்கு கறார் கண்டீசன் போட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! இது என்னடா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை?

இந்தப் பாடல் வெளியான நேரத்தில் கூட இந்தளவு ஹிட் ஆனதா என்று தெரியாது. ஆனால் இப்பொழுது எங்கு போனாலும் இந்த பாடல்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.அதற்கு விஜய் சாருக்கும் லோகேஷுக்கும் மிகுந்த நன்றி என உன்னி மேனன் கூறினார்.

இவரின் குரலில் காதல் ரோஜாவே, பூங்காற்றினிலே, தீம் தனனா தீம் தரனா, என்னவிலை அழகே, போன்ற அற்புதமான பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மனதை துளைத்தவர்தான் உன்னிமேனன். அவரை நீண்ட வருடங்கள் கழித்துப் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு முக்கியகாரணமாக இருந்தது லியோ படம்தான்.

இதையும் படிங்க: பிக்பாஸ் க்ரியேட்டிவ் டீம் தான் அது… உங்க போட்டியாளர்களை நீங்களே அசிங்கப்படுத்தலாமா..? கடுப்பான ரசிகர்கள்..!

Next Story