ஒரே மாதிரியான காஸ்ட்யூம்.. மேக்கப்! ட்வின்ஸ் கூட தோத்துடுவாங்க! திடீரென மீட்டிங்கை போட்ட நயன் - நஸ்ரியா

Nayan - Nazriya: நஸ்ரியாவும் நயன்தாராவும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட புகைப்படம் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. பார்ப்பதற்கு இருவருமே ஒரு சாயலில் ஒன்று போல் தெரிவார்கள். இந்த புகைப்படங்களை பார்க்கும் போதும் கிட்டத்தட்ட அப்படித்தான் தெரிகிறது. ஒரே மாதிரியான உடை ஒரே மாதிரியான மேக்கப் என இருவரும் அச்சு அசல் ஒன்று போல் இருக்கிறார்கள்.

2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். அதில் ரெஜினாவாக நயன்தாராவும் கீர்த்தனாவாக நஸ்ரியாவும் நடித்திருப்பார்கள். இவர்களுக்கு ஜோடியாக ஆர்யாவும் ஜெய்யும் நடித்திருந்தார்கள்.

இதையும் படிங்க: திராணியும் தைரியமும் இல்ல!. எங்க எண்ணனை விட்டுடுங்க!. கங்குவா அப்டேட் கேட்டு பொங்கும் சூர்யா ரசிகர்கள்..

 nayan

nayan

அட்லி அறிமுகமான படம் தான் ராஜா ராணி. ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆர்யா, சத்யராஜ், சந்தானம் ,ஜெய் என பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க காமெடி கலந்த ஒரு காதல் படமாக இந்த படம் அமைந்திருந்தது .இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு நயன்தாராவும் நஸ்ரியாவும் திடீரென ஒரு சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

அதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. கூடவே பகத் பாசிலும் விக்னேஷ் சிவனும் உடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகின்றது. புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாவ் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

இதையும் படிங்க: ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய ஆர்த்தி!.. அப்ப கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதானா?!..

 nayan

nayan

திருமணத்திற்கு பிறகும் இன்னும் தன்னுடைய மார்கெட்டை அதே உச்சத்தில் வைத்திருக்கிறார். அதே போல் தான் நஸ்ரியாவும் மலையாளத்தில் சமீப காலமாக படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சிறிது நாள்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா இப்போது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். மீண்டும் இவர்கள் இணைந்து படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it