‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு நயன்தாராவால் கிடைச்ச கிஃப்ட்! மாதவன் சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா

Published on: April 21, 2024
nayan
---Advertisement---

Actor Madhavan: தமிழ் சினிமாவில் கனவு நாயகனாக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகர் மாதவன். ஜெமினி, கார்த்திக், அரவிந்த்சாமி, அஜித் இவர்கள் வரிசையில் இளம் பெண்களை கவர்ந்த அந்த கள்வன் மாதவன்தான். அலைபாயுதே படத்தின் மூலம் மணிரத்தினத்தால் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அந்தப் படத்திலும் நடிப்பதற்கு ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்திருக்கிறார்,

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இளம் பெண்களின் மனதை கவர்ந்தார். மாதவன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும். மாதவன் மாதிரி ரொமான்ஸ் செய்ய வேண்டும். மாதவன் மாதிரி ஒரு காதலன் வேண்டும் என்று ஏங்காத பெண்களே இல்லை. அதுவும் அந்தப் படத்தில் வரும் என்றென்றும் புன்னகை பாடலில் காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு ஸ்டைலாக பைக்கில் வரும் மாதவனை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: விஜய் பட நடிகைக்கு விஜயகாந்த் வைத்த செல்லப் பெயர்!.. குசும்பு பிடிச்சவர் போல கேப்டன்!..

அதிலிருந்தே மாதவனுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது. மேடி என்று செல்லமாகவும் அழைக்கப்படுகிறார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் மாதவன் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாதவன் பற்றி இயக்குனர் லிங்குசாமி ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார்.

லிங்குசாமியும் மாதவனும் நல்ல நெருங்கி பழகும் அளவுக்கு நண்பர்களாம். அடிக்கடி லிங்குசாமிக்கு தொலைபேசி வாயிலாக மாதவன் பேசுவது வழக்கமாம். சினிமா மீது அதிக அக்கறை கொண்டவர் மாதவன் என லிங்குசாமி கூறினார். அதே போல் என்ன படம் நடித்தாலும் அதை பற்றி லிங்குசாமிக்கு தெரிவித்துவிடுவாராம்.

இதையும் படிங்க: கடைசி 10 படங்கள்.. வசூல் சக்கரவர்த்தி யார்?!.. சூப்பர்ஸ்டாரா?.. தளபதியா?!. வாங்க பார்ப்போம்!..

மேலும் அலைபாயுதே படத்தில் தனக்கும் ஷாலினிக்கும் இருந்த கெமிஸ்ட்ரி பற்றி அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பாராம். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி கண்டிப்பாக ஒரு ஹீரோ ஹீரோயினுக்கு படத்தில் இருப்பது அவசியம் என்றும் அதே போல் ஒரு கெமிஸ்ட்ரி தான் இப்போது நடித்துவரும் ஒரு படத்தில் நயன் தாராவுடன் இருக்கிறது என மாதவன் கூறினாராம்.

சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன், சித்தார்த் ஆகியோர் நடித்து வரும் படம் தி டெஸ்ட். அந்தப் படத்தில் நயனின் நடிப்பை சிலாகித்து பேசினாராம் மாதவன். என்ன அற்புதமாக நடிக்கிறார் நயன் என வியந்து பாராட்டினாராம்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயன்ற எம்ஜிஆர்… தோல்வியில் முடிய இதுதான் காரணமா?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.