நிஜமாத்தான் சொல்றீங்களா?.. ‘பாபா’ படத்திற்கு பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்ட ரஜினி!..

by Rohini |
rajini_main_cine
X

rajini

எங்கேயோ ஒரு சாதாரண மனிதராக நடத்துனராக இருந்து சினிமாவின் மீதுள்ள மோகத்தால் சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து பாலசந்தரால் கவரப்பட்டு கண்டெடுக்கப்பட்ட மாணிக்கம் தான் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று அவரது 73 வது பிறந்த நாளை அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் ஆங்காங்கே கொண்டாடி வருகிறார்கள்.

rajini1_cine

rajini

பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் முதன் முதலில் நடிக்க வந்தவர் தான் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் வில்லனாகவே பல திரைப்படங்களில் ஜொலித்தவர் பின்னாளில் இரண்டாவது கதாநாயகனாக வலம் வந்தார். காலப்போக்கில் இவரது மௌசை அறிந்த தமிழ் திரையுலகம் இவரை ஹீரோவாக்கி அழகு பார்த்தது.

இதையும் படிங்க : கடவுள் குறித்து கமல் என்ன தான் சொல்ல வருகிறார்? புரியாதவர்கள் இதை முதல்ல படிங்க..!

இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக மக்களின் நாயகனாக தலைவராக மக்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது ரஜினி நெல்சன் இயக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு உண்டான ஒரு சிறப்பம்சமே இவரின் ஸ்டைலும் சிகரெட் பிடிக்கும் தொணியும் தான்.

rajini2_cine

rajini

சினிமாவில் இன்று வரை ரஜினியின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை யாரும் முந்தியது இல்லை. அந்த அளவுக்கு நிஜ வாழ்க்கையிலும் சரி படத்திலும் சரி அந்த ஸ்டைலை அப்படியே கடைப்பிடித்து வந்தார் ரஜினி. மேலும் சிகரெட் மட்டுமில்லாது எல்லா கெட்டப்பழக்கங்களும் உடையவன் நான் என்று ரஜினியே ஒரு மேடையில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : அவர் சூர்யாவோட ஆள்!..மங்காத்தா ரிலீஸில் கடுப்பான அஜித்…இவ்வளவு நடந்துச்சா?…

அப்படி இருந்த ரஜினி சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அவர் நடித்த பாபா திரைப்படத்திற்கு வேறெந்த படத்திலும் அவர் காட்டியதில்லை. சொல்லப்போனால் சிகரெட் பிடிக்கும் வழக்கத்தையே அந்த படத்திற்கு பிறகு நிறுத்திக் கொண்டார் என்று திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது.

rajini3_cine

rajini

மேலும் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட கடைசி படமும் கூட பாபா படம் தான் என்றும் சொல்லப்படுகிறது. இது எதனால் எழுந்த மாற்றம் என தெரியவில்லை. ஒரு வேளை தன்னால் தன் ரசிகர்கள் கெட்டு போகக்கூடாது என்பதற்காகவா? இல்லை அந்த சமயத்தில் தான் இமயமலை சென்று வந்திருந்தார். அதனால் கூட எழுந்த மாற்றமா? என தெரியவில்லை.எப்படியோ ஒரு நல்ல முடிவை தான் எடுத்திருக்கிறார் ரஜினி என்று பிரபலங்கள் மத்தியில் கூறுகிறார்கள்.

Next Story