மைக்க பாத்ததும் ஓடுற ஆளு! இவர வச்சா அந்த சீன எடுக்குறீங்க – ‘தளபதி68’ல் விஜய்க்கு டஃபே இதுதான்

Published on: October 14, 2023
mohan
---Advertisement---

Thalapathy68 : விஜயின் நடிப்பில் தளபதி68 படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் லியோ படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி விட்டது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான ஹைப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருக்கின்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜயின் நடிப்பில் தயாராகும் படம்  தளபதி68. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு இள வயது விஜயாகவும் ஒரு நடுத்தர வயது விஜயாகவும் நடிக்கிறாராம்.

இதையும் படிங்க: கலக்கிட்ட கண்ணா!. லோக்கியை கொண்டாடிய ரஜினி!. தலைவர் 171 படம் இப்படித்தான் இருக்குமாம்…

மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி என இரு ஹீரோயின்கள் நடிப்பதாகவும் 90களின் கனவு நாயகனாக வலம் வந்த பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கூடவே பிரபுதேவா,மாதவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. அரவிந்த்சாமி இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: புருஷனுக்கு மட்டுமா? புள்ளைகளுக்கும் ரெண்டு தான் போலயே…

இப்போது அவருக்கு பதிலாக 80களில் கொடிகட்டிப் பறந்த மைக் மோகன் இந்தப் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே படத்தின் பூஜை முடிந்ததும் பாடல் காட்சியைத்தான் படமாக்கினார்கள்.

அது முடிந்து இப்போது சண்டைக் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் விஜய்க்கும் மோகனுக்கும் இடையேயான சண்டைக் காட்சிகளாம். இதுவரை எந்த படத்திலாவது மோகன் சண்டை போட்டு நாம் பார்த்திருப்போமா?

இதையும் படிங்க: லியோ பட கதை புதுசுன்னு நான் சொல்லவே இல்லையே!.. போட்டு தாக்கும் லோகேஷ் கனகராஜ்..

இந்தப் பக்கம் வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக சும்மா பிரித்து மேய்பவர் விஜய். எப்படி மோகன் விஜய்க்கு டஃப் கொடுக்கப் போகிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.