‘இந்தியன் 2’ க்கு பிறகு வெயிட்டான ஒரு விஷுவல் ட்ரீட் இருக்கு பாஸ்! நீண்ட வருட ரகசியத்தை உடைக்கும் கமல்

by Rohini |
kamal
X

kamal

Kamalhasan: இந்திய சினிமாவில் ஒரு ஐகானிக் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவுக்காக இவர் அர்ப்பணித்த விஷயங்கள் ஏராளம். இவருக்கு தெரியாத எந்த துறையும் சினிமாவில் இல்லை. ஒவ்வொரு நுணுக்கங்களை அணு அணுவாக கற்றுக் கொண்டவர். ஒரு என்சைக்ளோபீடியா என கமலுக்கும் சினிமாவுக்கும் உள்ள நெருக்கத்தை பல வகைகளில் கூறிக் கொண்டே போகலாம்.

அந்த அளவுக்கு சினிமா சினிமா சினிமா தான் என் உலகம் என இன்று வரை வாழ்ந்து வருகிறார் கமல்ஹாசன். அவருடைய நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நேரத்தில் சினிமாவில் மட்டுமே இருந்தார் கமல் .

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டரைக் கொண்டு வந்ததே இதற்குத் தானாம்… பிரபலம் தகவல்

ஆனால் இந்தியன் 2 படத்தை பொறுத்த வரைக்கும் அவர் அரசியலுக்கு வந்து வெளியாகும் ஒரு பொலிட்டிக்கல் திரைப்படம் என்பதால் அதுவும் ஊழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அரசுக்கு எதிராக அவர் பேசும் வசனங்கள் எப்படி எல்லாம் இந்த படத்தில் அமைந்திருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் .

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு செல்லும் கமலிடம் மும்பையில் பல பத்திரிக்கையாளர்கள் கேட்ட ஒரே கேள்வி ‘அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்புவாக எப்படி நடித்தீர்கள்? அதன் ரகசியம் என்ன? இப்பவும் நீங்கள் சொல்லவில்லை என்றால் அடுத்த தலைமுறையினருக்கு இதைப் பற்றிய அறிவு எப்படி கிடைக்கும்?’ என்ற ஒரு கேள்வியை முன் வைத்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: சண்டக்காரன் காலில் விழுவதே மேல்! ‘கோட்’ படத்தில் மறைமுகமாக வேலை பார்க்கும் ரெட் ஜெயண்ட்

இதன் பிறகு தான் கமலுக்கே ஒரு யோசனை வந்ததாம். நாம் அறிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தான் பேரானந்தம். அதனால் இத்தனை வருடமாக பூட்டி வைத்திருந்த ரகசியத்தை சொல்கிறேன் எனக் கூறிய கமல் ஒரு ஒன்றரை மாதம் காத்திருங்கள். அதன் பிறகு கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்திற்கான ரகசியத்தை நான் கூறுகிறேன் என சொல்லி இருக்கிறாராம்.

இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் பேசிய நம் நண்பர்கள் இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் கண்டிப்பாக அந்த அப்பு கதாபாத்திரம் எப்படி உருவானது ?அதை எப்படி எடுத்தார்கள் என்பதை பற்றி சொன்னால்தான் நல்லது. ஒரு அறிக்கையாக வெளியிட்டால் யாருக்கும் புரியாது. கண்டிப்பாக மேக்கிங் வீடியோ எடுத்து இருப்பார்கள். அதை வீடியோவாக தான் கமல் வெளியிடப் போகிறார் என கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: இந்தியன் சினிமாவிலேயே சாதனை படைத்த ‘கல்கி’! விமர்சனத்தையும் தாண்டி என்னெல்லாம் இருக்கு பாருங்க

Next Story