மிலாடி நபி முதல் காந்தி ஜெயந்தி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள எந்தவொரு பெரிய படமும் இல்லாத நிலையில், சந்திரமுகி 2 திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
விஷாலின் மார்க் ஆண்டனியுடன் மோதுவதற்கு பதிலாக இறைவன், சித்தா உள்ளிட்ட படங்களுடன் மோதினால் கமர்ஷியல் படம் என்பதால் மக்கள் கூட்டம் நம்ம படத்துக்குத் தான் வருவார்கள் என லைகா போட்ட பக்கா பிளானுக்கு பி. வாசு சொன்ன மெகா உருட்டல் காரணம் எல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சைலன்ட்டா சித்து வேலை காட்ட பார்த்த சித்தார்த்!.. சும்மா வசமா இப்படி சிக்கிட்டாரேப்பா!.. என்ன ஆச்சு?..
ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான சந்திரமுகி 2 முதல் நாளில் இந்தியா முழுவதும் நல்ல வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புக் மை ஷோ எனும் டிக்கெட் புக்கிங் செயலியில் மட்டும் இந்தியா முழுவதும் 2.35 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை நடைபெற்றதாகவும், முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடி என்றும் உலகம் முழுவதும் முதல் நாளில் சந்திரமுகி 2 திரைப்படம் 7.8 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்ற சைக்க த்ரில்லர் படமாக இருந்தாலும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்காத காரணத்தால் அந்த படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும், சித்தார்த் நடித்த சித்தா படம் நல்லா இருந்தாலும், மக்கள் விடுமுறையில் தேடும் என்டர்டெயின்மென்ட் படமாக அது இருக்காது என்கிற மனநிலையில், அந்த படத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் புக்கிங் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைக்கு அசுர வேகத்தில் ஹவுஸ்ஃபுல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…