ஜெயலலிதாவை தொடர்ந்து சின்னம்மாவிடமும் இருந்து வந்த மிரட்டல்! சசிகலா தூண்டுதலில் விஜய் நடித்த படம்
கோலிவுட்டின் வசூல் மன்னன் விஜயின் படங்கள் ஒவ்வொரு முறை ரிலீஸாகும் போதும் ஏதாவது ஒரு பெரிய பிரச்சினைகளை சந்தித்து விட்டுதான் ரிலீஸாகின்றன.அந்த வகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய படமாக தலைவா படம் அமைந்தது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் விஜய், அமலாபால், சந்தானம், சுரேஷ் , சத்யராஜ் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
அந்தப் படத்தில் போஸ்டரில் தலைவா மற்றும் ‘டைம் டூ லீடு’ என்ற டேக் லைனோடு தலைப்பு இருந்தது. இது அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த ஜெயலலிதாவையும் அதிமுகவையும் புண்படுத்துகிற மாதிரி அமைந்ததால் அந்த டேக் லைனை எடுக்கும் படி ஆளும் கட்சியிலிருந்து விஜய்க்கும் படக்குழுவுக்கு மிரட்டல் வந்ததாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க : தனுஷுக்கே அம்மாவா நடிச்சாச்சு! தளபதிக்கு நடிக்க மாட்டேனா? சினேகாவின் முடிவால் ஆச்சரியத்தில் கோலிவுட்
அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை வெளியிட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தடை விதிக்கப்பட்டது. இது சம்பந்தமாக இயக்குனர் , விஜய் போன்றோர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்திக்க சென்றதாகவும் ஆனால் ஜெயலலிதா விஜயை பார்க்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் பரவியது.
இது ஒரு புறம் இருக்க ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் முக்கிய பிரமுகருமான சசிகலாவிடம் இருந்தும் விஜய்க்கு ஒரு மிரட்டல் வந்ததாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறினார். அதாவது விஜய் மற்றும் சினேகா நடிப்பில் வெளிவந்த வசீகரா திரைப்படம்.
இதையும் படிங்க : ஜெயிலர் இவ்வளவு ஹிட் ஆனதுக்கு 4 விஷயம்தான் காரணம்!.. புட்டு புட்டு வைக்கும் திரையுலகம்….
இந்த படத்தில் விஜயை நடிக்க வைக்க போயஸ் கார்டனில் இருந்து சசிகலா தரப்பில் விஜய்க்கு மிரட்டல் போனதாகவும் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தனன் கூறினார். அவர் கூறியதில் இருந்து சசிகலாவிற்கும் அந்தப் படத்திற்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது என தெரியவில்லை. அதன் காரணமாகவே வசீகரா திரைப்படத்தில் விஜய் நடித்தாராம்.
இதையும் படிங்க : அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!…
அந்த பத்திரிக்கையாளர் பேசிய வீடியோ :