மிஸ்ஸான லியோ!.. மொத்த படத்தையும் வாங்கி குவிக்கும் ரெட் ஜெயன்ட்.. புதுசா சிக்கியது எது தெரியுமா?..

by Saranya M |   ( Updated:2023-10-14 08:57:37  )
மிஸ்ஸான லியோ!.. மொத்த படத்தையும் வாங்கி குவிக்கும் ரெட் ஜெயன்ட்.. புதுசா சிக்கியது எது தெரியுமா?..
X

Red Giant Movies - தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சென்னை வெளியீட்டு உரிமை ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு கிடைக்காத நிலையில் தான் ஆடியோ லான்ச் முதல் அனைத்து பிரச்சினைகளும் உருவாகி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றி உள்ளதாக படம் ரிலீசாக இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் அதிரடி அறிவுக்கு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கவின் ஹனிமூனே முடிச்சிட்டு ஜாலியா இருக்காரு!.. லாஸ்லியா என்ன எக்ஸ்பிரஷனே இல்லாம புலம்பிட்டு இருக்காரு!..

ரஜினிகாந்தின் படத்தை தொடர்ந்து அவரது சிஷ்யன் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரெட் ஜெயன்ட் கைவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்கிற அறிவிப்பு தற்போது வெளியானது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரண்டு பெரிய படங்களும் ரெட் ஜெயிண்ட் தான் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே துணிவு பழத்துக்கு நள்ளிரவு 1:00 மணி காட்சியும், வாரிசு படத்துக்கு 4:00 மணி காட்சியும் போடப்பட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்ரீதேவி பெத்த புள்ள இப்படி நிக்குதே!.. ஓவர் டோஸ் கிளாமரில் உசுர வாங்கும் ஜான்வி கபூர்!..

லியோ படத்திற்கு தற்போது 7:00 மணி காட்சி கூட இல்லாமல் போக காரணமும் ரெட் ஜெயண்ட்டுக்கு அந்த படத்தை கொடுக்காத தான் காரணம் என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர். இந்நிலையில், ஒரு தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்யப்போவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிகர்தண்டா திரைப்படத்தைப் போலவே இந்தப் படம் இருக்கும் என்பது டிரைலரை பார்க்கும்போதே யூகிக்க முடிகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளன.

ஆனால், தற்போது ரெட் ஜெயின் படத்தை வாங்கியிருக்கும் நிலையில் பெரிய அளவில் புரமோஷன் செய்து படத்தை ஓட வைத்து விடுவார்கள் என்றே கூறுகின்றனர்.

Next Story