வெற்றிக்குப் பிறகு எந்தவொரு நடிகரும் செய்யாத ஒரு காரியம்! ஷாக் கொடுத்த விஜய்சேதுபதி
Vijaysethupathi: கோலிவுட்டில் ஒரு ஹீரோவாக மீண்டும் தனது கம்பேக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களாக வில்லனாவே பல படங்களில் நடித்து தனது ஹீரோ இமேஜை முற்றிலுமாக மாற்றியிருந்தார். பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் இவர்தான் ஆஸ்தான வில்லனாக நடித்து வந்தார்.
ஹீரோவாக அவர் வெற்றியடைந்ததை விட வில்லனாக மக்கள் இதயத்தில் ஆழமாக பதிந்தார். அந்த அளவுக்கு வில்லனாகவும் மாஸ் காட்டி வந்தார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கின்றது. எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத ஒரு அந்தஸ்து விஜய் சேதுபதிக்கு கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க: 150 ரூபாய்க்கு குவார்ட்டர் வாங்க காசில்லாம 50 ரூபாய்க்கு சாராயம் வாங்கி குடிக்கிறாங்க!.. பொங்கிய சூர்யா!..
பெரிய பெரிய முன்னணி நடிகர்களின் ஐம்பதாவது படங்கள் அவர்களுக்கு பெரும்பாலும் தோல்வியையே தந்திருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதிக்கு அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று தந்திருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு ஹீரோவாக மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ய வரிசை கட்டி நின்று கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களாம். அந்த படத்தை இயக்குவது பாண்டிராஜ் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பாட்டுலாம் ஹிட்! படம் பிளாப்… இளையராஜா தயாரிப்பதையே நிறுத்துனதுக்கு இதுதான் காரணமாம்!
எந்த ஒரு நடிகரானாலும் ஒரு பெரிய வெற்றியை கொடுத்த பிறகு முதலில் செய்வது அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவது தான். ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரைக்கும் மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக தான் நடிக்கும் இந்த படத்தில் அவரது சம்பளத்தை பெரிய அளவில் குறைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுவரை 17, 18 கோடி வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரியும் இந்த படத்தில் 10 கோடி சம்பளம் மட்டும் போதும் எனக் கூறியிருக்கிறாராம் .ஏனெனில் ஹீரோவாக நடித்த எந்த ஒரு படமும் வெற்றி அடையவில்லை என்பதால் இனிமேல் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை இந்த அளவிலேயே கொண்டு போகலாம் என்று நினைத்திருக்கிறார் என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: பாலசந்தர் போன்ல பேசுனாருன்னா ரஜினியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் தெரியுமா?