மாரிமுத்து இறந்த அன்று மகன் சொன்ன விஷயம்! நாமெல்லாம் ஒன்னுமில்ல - வேதனையுடன் பேசிய நடிகர்
Actor Marimuthu: சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகுக்கு மீளாத ஒரு அதிர்ச்சியாக அமைந்தது நடிகர் மாரிமுத்துவின் மரணம். இறப்பதற்கு ஒரு 20 நிமிடத்திற்கு முன்புவரை நன்றாக பேசிக் கொண்டிருந்த ஒரு மனிதர் திடீரென இறந்து விட்டார் என்று கேட்கும் போது நமது நெஞ்சே அடைத்து விடும்.
அப்படித்தான் மாரிமுத்துவின் மரணம் அவரது ரசிகர்களுக்கு அவருடன் அந்த நேரத்தில் இருந்த சக நடிகர்களுக்கும் இருந்தது. நெஞ்சுவலியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த மாரிமுத்துவின் உடலுக்கு திரையுலகில் இருந்து பல பேர் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: அவர ஓகே பண்ணாங்க… நான் மட்டும் இளிச்சவாயனா? இயக்குனரிடம் மல்லுக்கு நின்ற ரஜினி! ஓட்டம் பிடித்த இயக்குனர்!
இந்த நிலையில் அவருடன் நெருங்கி பழகியவரும் நண்பரும் நடிகருமான ஜீவா ரவி சில விஷயங்களை பகிர்ந்தார். சமீபத்தில் தான் மாரிமுத்து ஒரு சொகுசு பங்களா கட்டி வருவதாகவும் அந்த வீட்டில் தன் மனைவிக்காக ஒரு தனி அறையே பார்த்து பார்த்து கட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த பங்களாவில் நீச்சல் குளம் வர இருப்பதாகவும் மிக சந்தோஷமாக ஜீவா ரவியிடம் பேசிக் கொண்டிருந்தாராம் மாரிமுத்து. ஆனால் அது எதையும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டாரே என கண்கலங்கினார். மேலும் இறந்த அன்று ஜீவா ரவி அஞ்சலி செலுத்த போயிருந்தாராம்.
இதையும் படிங்க: அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!…
அவர் மகனை பார்த்து என்ன சொல்வது என தெரியாமல் நின்றிருந்த ஜீவா ரவியை பார்த்ததும் மாரிமுத்துவின் மகன் ‘அப்பாவுக்கு அவ்ளோதானு இருந்திருக்கு சார். அதான் போயிட்டார். இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன் என் குடும்பத்தை’ என்று சொன்னதோடு விடாமல்,
‘எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார் என் அப்பா. ஆனால் என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்த பிறகே நான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று மாரிமுத்து மகன் கூறும் போது ஜீவா ரவி அழுது விட்டாராம். மேலும் அந்த இடத்தில் எந்த மகன் இருந்தாலும் பேச மாட்டான்.ஆனால் மாரிமுத்துவின் மகன் இப்படி சொன்னது எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என ஜீவா ரவி கூறினார்.
இதையும் படிங்க:பெத்த அப்பனுக்கு இப்படி ஒரு கஷ்டம்! கண்டுக்காத விஜய் – கேப்டன எங்க போய் நலம் விசாரிக்க போறாரு?
உடனே ஜீவா ரவி ‘ நீ யாரிடமும் கை ஏந்தி நிற்கிற நிலைமையில் உன் அப்பா விட்டு செல்லவில்லை. அதனால் உன் அப்பாவின் இடத்தில் இருந்து உன் குடும்பத்தை நல்ல படியாக பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாராம்.
ஜீவா ரவி சொன்னதை போல மாரிமுத்து ஏழேழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என நினைக்கவில்லை. இருக்கிற வரைக்கும் தன் குடும்பத்தை மிக சந்தோஷமாக வைத்துக் கொண்டார். இப்போது இல்லை என்றாலும் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்கிற நிலைக்கும் மாரிமுத்து விடவில்லை. தேவையானதை செய்து விட்டுத்தான் சென்றிருக்கிறார். ஒரு அற்புதமான மனிதரை திரையுலகம் உட்பட அனைவரும் இழந்து விட்டோம்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms