காசு மேலே காசு வந்தா யாருக்குத்தான் ஆசை வராது!.. எஸ்.ஜே.சூர்யாவின் மனதை மாற்றிய மார்க் ஆண்டனி!..

Published on: October 5, 2023
surya
---Advertisement---

S.J.Surya: தமிழ் சினிமாவில் ரகுவரனுக்கு அடுத்தப்படியாக வில்லன் மாஸில் கலக்கி வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. ரகுவரனுக்கு உண்டான அந்த கிரேஸ் இவர் மீது திரும்பியிருக்கிறது. திரையில் பார்த்ததுமே ஹீரோவுக்கு உண்டான வரவேற்பை விட அதிகமாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு கொடுத்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக வந்து அதன் பின் இயக்குனராக மாறி எடுத்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹீரோவை வைத்து எடுத்து அந்த இரண்டு படங்களையுமே காலங்காலமாக பேசும் படி செய்தார் எஸ்.ஜே.சூர்யா.

இதையும் படிங்க: அது ஸ்லிம் பாடி! இது வெயிட் பாடி! ‘தளபதி 68’ல் விழிபிதுங்கி நிற்கும் படக்குழு – கொஞ்சம் குறைங்க பாஸ்

விஜய் , அஜித்தை பற்றி பேசும் போதெல்லாம் கண்டிப்பாக அதில் எஸ்.ஜே.சூர்யாவும் இடம்பெறுவார். ஏனெனில் அஜித்,விஜய் கெரியரில் டாப் 5 படங்களில் இவர் எடுத்த குஷி மற்றும் வாலி படங்கள் இடம் பெறாமல் இருக்காது.

அந்த படங்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிகராக மாறினார். ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரியவர்களை முகம் சுழிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக ஜொலிக்கமுடியவில்லை. ஆனால் காற்று எப்போதும் ஒரு பக்கம் வீசாது என்று சொல்வார்கள்.அதே போல எஸ்.ஜே. சூர்யாவின் வாழ்க்கையிலும் நடந்து வில்லன் அவதாரம் எடுத்தார்.

இதையும் படிங்க: நீங்க இருக்கது பிக்பாஸ்… கொஞ்சம் யோசிச்சு பேசுங்க பாஸ்..! பிரதீப் பெற்றோர் மரணத்தை கொச்சைப்படுத்திய விஜய் வர்மா…

மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டினார். அதனை தொடர்ந்து வில்லனாகவே பிரகாசித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் விஷாலை விட அதிகம் ஸ்கோர் செய்தவர் எஸ்.ஜே.சூர்யாதான்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. கில்லர் என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் பிரீ புரடக்‌ஷன் வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருந்ததாம்.

இதையும் படிங்க: அஜித்தை பற்றி த்ரிஷா சொன்ன ஷாக்கான நியூஸ்! – களைகட்டப் போகும் ‘விடாமுயற்சி’

ஆனால் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பு பல கம்பெனிகளில் இருந்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஆஃபர்கள் வந்து குவிகின்றதாம்.பல லட்சம் சம்பளத்தோடு வரிசை கட்டி நிற்கிறார்களாம். அதனால் படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட்டாராம் எஸ்.ஜே.சூர்யா.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.