மோடியை மேடை ஏத்தியாச்சு! அடுத்ததா என்ன? சென்னை வந்ததும் ரஜினி நேரா எங்க போனார் தெரியுமா

X

Actor Rajini: ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்து விட்டு இமயமலை பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு தற்போது பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்தார் ரஜினி. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேருவுக்கு பிறகு மூன்றாவது முறை பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றிருக்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி பதவி ஏற்பு விழா டெல்லியில் நடைபெற்றது. உலகத் தலைவர்கள் பல பேருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இயக்குனரிடம் ஒரு மாசம் பேசாமல் இருந்த விஜய்!.. கில்லி ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!.

இதில் நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து ஆன்மீக பயணமாக இமயமலை சென்ற ரஜினி அடுத்த பயணமாக டெல்லி சென்றிருந்தார். இப்போது பதவி ஏற்பு விழாவை முடித்த கையோடு மீண்டும் சென்னை வந்திருக்கிறார். வந்ததும் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த டப்பிங் பணியில் இப்போது ரஜினி கலந்து கொண்டு வருகிறார்.டப்பிங் பணியை முடித்ததும் அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. கூலி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் .

இதையும் படிங்க: அந்த எபெக்ட் இல்லாமலேயே கங்குவா படத்தைப் பார்த்து பிரமித்துப் போன தயாரிப்பாளர்… படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

இன்னும் கூடுதல் சிறப்பம்சமாக கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு சத்யராஜும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார் .ஆகவே இந்த இருவரையும் மீண்டும் திரையில் ஒன்றாக பார்க்கும் தருணம் வெகு சீக்கிரமே நடைபெற போகிறது. அதை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.