வண்டி நிக்காது போலயே! மாரி செல்வராஜ், நெல்சனை அடுத்து ரஜினியின் அடுத்த டார்கெட் இவர்தான்

rajini
Actor Rajini: ரஜினி இருக்கிற வேகத்தை பார்த்தால் இன்னும் 5 வருடங்களில் டபுள் செஞ்சுரி அடித்தவார் என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவரது லைன் அப்பில் அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றன. தற்போது ரஜினி த.ச.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க ஏற்கனவே அவரது நடிப்பில் லால்சலாம் படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் ஒரு வெயிட்டான கதாபாத்திரமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அலார்ட்டா இருக்கும் தளபதி!.. விஜய்க்காக எல்லாத்தையும் தியாகம் செய்யும் வெங்கட்பிரபு!..
வேட்டையன் படத்திற்கு பிறகு ரஜினி மாரி செல்வராஜுடன் இணைவதாக கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படியென்றால் ஜெயிலர் 2 படத்திற்கான வாய்ப்பு இல்லையா என்ற பல சந்தேகங்கள் எழுந்தன.
ஆனால் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திற்கு பிறகு ரஜினி மீண்டும் நெல்சனுடன் இணைய இருக்கிறாராம். ஒரு வேளை அந்தப் படம் ஜெயிலர் 2 வாக இருக்கலாம் என்று தெரிகிறது. இப்படி மாரி செல்வராஜ் அடுத்ததாக நெல்சன் என கைவசம் படங்களை வைத்திருக்கும் ரஜினியை வைத்து அடுத்ததாக ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் படம் இயக்கப் போவதாக கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டும் நடக்காமல் போன ஒரே விஷயம்… தடையாக இருந்த அரசியல்….
அது வேறு யாருமில்லை. ஐசரி கணேஷ்தான். அவர் நீண்டகாலமாகவே ரஜினி, கமலை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். அதனால் ஒரு நாள் ஐசரி கணேஷை அழைத்த ரஜினி சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொன்னதாகவும் அது சம்பந்தமான வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.