எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டும் நடக்காமல் போன ஒரே விஷயம்... தடையாக இருந்த அரசியல்....
MGR: 1950 முதல் 70 வரை தமிழ் திரையுலகின் முக்கிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர் என்பது பலருக்கும் தெரியும். நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆருக்கு 1937 முதல் 1947 வரை சின்ன சின்ன வேடங்கள்தான் கிடைத்தது. 1947ம் வருடம்தான் ராஜகுமாரி என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி ஹீரோவாக மாற்றியது. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து தனிப்பெரும் ஆளுமையாக மாறினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடித்தாலே அப்படம் வெற்றி என்கிற நிலையும் உருவானது. பெரும்பாலான மக்கள் அவரை நேசித்தார்கள். வெறித்தனமான ரசிகர்களும் உருவானார்கள்.
இதையும் படிங்க: நடிகரின் காலில் விழுந்த எம்.ஜி.ஆர்!.. அதற்கான காரணம் இதுதான்!.. ஒரு ஆச்சர்ய தகவல்…
ஏழை பங்காளன் வேடத்தில்தான் எல்லா படங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்தார். மெல்ல மெல்ல அரசியலிலும் நுழைந்தார். துவக்கத்தில் திமுக கட்சிக்கு ஆதரவாக இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பின் கலைஞர் கருணாநிதி அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட அதிமுக என்கிற கட்சியையும் உருவாக்கி முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றியை பெற்று முதல்வராகவும் இருந்தார்.
1978 முதல் 87 வரை ஆட்சியில் இருந்தார். முதலமைச்சர் ஆனபின் அவரால் சினிமாவில் நடிக்கமுடியவில்லை. ஆனால், பல தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். பல பொது நிகழ்ச்சிகளிலும் அவரை நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எம்.ஜி.ஆருக்கும் அந்த ஆசை இருந்தது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது வந்த கோபத்தில் அதிரடி முடிவெடுத்த சின்னப்ப தேவர்!.. உருவான சூப்பர் ஹிட் படம்…
எனவே, என் நேரத்தில் பாதியை சினிமாவுக்கும், மீதியை என் முதல்வர் பதவிக்கும் செலவழிப்பேன் என அவரும் மேடையில் சொல்லிவிட ‘எம்.ஜி.ஆர் மீண்டும் நடிக்க வருகிறார்’ என தமிழ்நாடே பரபரப்பானது. பத்திரிக்கைகள் அடுத்த நாள் காலை தலைப்பு செய்திக்கு இந்த செய்தியை தயாரித்துவிட்டார்கள். ஆனால், அப்போது பிரதமராக இருந்த மொராஜ் தேசாய் எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு ‘நீங்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். உங்களுக்கு நிறைய பணிகள் இருக்கிறது.
நீங்கள் மீண்டும் நடிக்க விரும்பினால் முதலமைச்சர் பதவியில் வேறு ஒருவரை அமர வைத்துவிட்டு நடிக்க போங்கள்’ என சொல்ல எம்.ஜி.ஆர் அந்த ஆசையை விட்டுவிட்டார். எம்.ஜி.ஆர் நடிக்க போகிறார் என்கிற செய்தியை நிறுத்துமாறு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனாலும், தந்தி பத்திரிக்கைகள் இந்த செய்தி வெளிவந்துவிட்டது. ஆனாலும், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்கிற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்து அப்படம் 1978ம் வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…