Pushpa 2: விஜயை காப்பாற்றிய புஷ்பா 2.. இல்லைனா சோலிய முடிச்சிருப்பாங்க! இப்ப தெரியுதா?
Pushpa 2: இன்று உலகெங்கிலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஸ்மிகா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ் .அந்த திரைப்படம் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் பெற்று பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
அந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். படத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க காரணமாக அமைந்தது. இந்த நிலையில் புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இதுவரை நல்ல ஒரு ரெஸ்பான்ஸை படம் பெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாஸில் இவர்களுக்கு இடையேயான மோதல் பெருமளவு இருப்பதாக தெரிகிறது.
அதனால் பகத்பாசிலின் நடிப்பு இந்த இரண்டாம் பாகத்தில் எப்படியாக மாறி இருக்கிறது என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கேற்ற வகையில் படமும் வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இதற்கிடையில் ஹைதராபாத்தில் புஷ்பா படத்தின் முதல் காட்சியைக் காண திரளான ரசிகர்கள் கூடியிருந்ததை பார்க்க முடிந்தது .
இதையும் படிங்க: இயக்குநர் வீட்டில் நடந்த துக்கம்… பிரபலங்கள் இரங்கல்!
அது சம்பந்தமான புகைப்படமும் வெளியானது. இதில் அதிகாலை காட்சியைக் காண ரசிகர்கள் கூட்டமாக வரும் போது அதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவமும் நடந்திருக்கிறது. அதுவும் அல்லு அர்ஜுன் முதல் காட்சியைக் காண வந்தபோது அவரை பார்ப்பதற்காக அந்த பெண் முண்டியடித்துக் கொண்டு வரும்போது மூச்சுத் திணறி இறந்ததாக தெரிகிறது.
இதே மாதிரியான ஒரு சம்பவம் துணிவு படத்தின் போதும் அஜித் ரசிகர் ஒருவர் பலியானார். இப்படி ஒரு சோகமான சம்பவம் இன்று நடந்திருக்கையில் இதை விஜய் ரசிகர்கள் தங்களுக்கு சாதகமாக அமைத்து கொண்டனர். அதாவது ஃபெங்கால் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய இடத்திற்கு அழைத்து விஜய் தேவையான உதவி பொருட்களை வழங்கினார்.
இது பெரும் பேசப் பொருளாக மாறியது. ஒரு அரசியல் தலைவராக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று நலம் விசாரித்து உதவி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு விஜய் தன்னுடைய இடத்திற்கு அவர்களை அழைத்து இந்த மாதிரி செய்யலாமா என இப்போது வரை கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது .
ஆனால் விஜய் தரப்பில் இருந்து ‘ நான் அங்கு வந்தால் கூட்டம் அதிகமாக வரும். அதனாலயே உங்களை என்னுடைய இடத்திற்கு வரவழைத்து இருக்கிறேன். எதுவும் நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என கூறியிருந்தார். ஆனால் அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் விஜயின் இந்த பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
இதையும் படிங்க: படத்துல 3 ஹீரோயின்களா?.. புஷ்பா 2 எப்படி இருக்கு?.. பயில்வான் என்ன இப்படி சொல்லிட்டாரு!..
இந்த நிலையில் இன்று புஷ்பா 2 படத்தை பார்க்கவும் அல்லு அர்ஜனை சந்திக்கவும் ஒரு பெண் முயற்சி செய்ய மூச்சு திணறி அவர் இறந்ததனால் இதை இணைத்து விஜய் ரசிகர்கள் இப்போ தெரியுதா ஏன் விஜய் வெளியில வரலைன்னு என கமெண்டில் கூறி வருகின்றனர்.