வரிசையா விஜய் பட ஹீரோயின்களே வளைச்சு போடுறாரே ரன்பீர் கபூர்!.. அடுத்த பாகத்தில் சிக்கியது இவரா?..
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான அனிமல் திரைப்படம் இதுவரை 700 கோடி ரூபாயை வசூல் செய்து அசுர வேட்டை நடத்தி வருகிறது.
விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்வீர் கபூர், அனில் கபூர் மற்றும் பாபி தியோல் நடித்த அனிமல் திரைப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஹனிமூன் டூர் ஸ்டார்ட்!.. புதுமாப்பிள்ளை ரெடின் கிங்ஸ்லி மனைவியோட செம மஜா பண்றாரே!..
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் நடித்து வந்த நிலையில், இந்த ஆண்டு தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். உடனடியாக பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜயுடன் நடித்த இன்னொரு சூப்பர் நடிகையை ரன்பீர் கபூர் ஜோடியாக்க போகிறார் என பாலிவுட்டில் தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தலைவரு செம மாஸ்!.. வெளியானது லால் சலாம் வீடியோ!.. ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா!..
அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் படுநெருக்கமான காட்சிகளில் ரன்பீர் கபூர் நடித்த நிலையில், அடுத்த பார்ட்டில் அதைவிட அதிகப்படியான எல்லை மீறும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் ரன்பீர் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே அனிமல் பார்க் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கப் போகிறாரா இல்லையா என்கிற அப்டேட் வெளியாகிவிடும்.
பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள மாளவிகா மோகனன் அடுத்து அனிமல் படத்தில் நடித்தால் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.