More
Categories: Cinema News latest news

சிவாஜிக்கு பிறகு கார்த்திக்குத்தான் அந்த அங்கீகாரம் கிடைச்சது! ‘பருத்திவீரன்’ குறித்து பேரரசு சொன்ன சீக்ரெட்

Paruthiveeran: கடந்த சில தினங்களாக அமீர் – ஞானவேல் ராஜா குறித்த பிரச்சினைதான் சமூக வலைதளங்களில் கொழுந்து விட்டு எரிகிறது. சாதாரண மக்கள் கூட இந்த பிரச்சினையை பற்றி அதிகமாக பேசி வருகிறார்கள். அந்தளவுக்கு அமீரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார் ஞானவேல் ராஜா.

இதுகுறித்து பிரபல இயக்குனர் பேரரசுவும் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது பருத்திவீரன் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆன பிறகும் கூட இந்த பிரச்சினையை கொண்டு வந்தது சரியானதாக இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஜக்குபாய் வராமல் போனதற்கு இதுதான் காரணம்!.. பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்…

இருவரும் பேசி ஒரு சுமூகமான தீர்வை தேடியிருக்கலாம். அதை விட்டு ஆளாளுக்கு இப்படி பேசுவது முறையானதாக இல்லை என்று பேரரசு கூறினார். அதுமட்டுமில்லாமல் ஞானவேல் ராஜா இப்போது சமூகத்தில் ஒரு  மதிக்கத்தக்க இடத்தில் இருக்கிறார்.

அமீரும் ஒரு சிறந்த இயக்குனர். அப்படி இருக்கும் போது அமீரை ஞானவேல் ராஜா திருடன் என்று சொல்லியிருக்க கூடாது. பட்டிதொட்டியெல்லாம் கார்த்தியை கொண்டு சேர்த்த படம் பருத்திவீரன். சிவாஜிக்கு பிறகு முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானவர் கார்த்திதான். அதற்கு காரணமாக இருந்த படம் பருத்திவீரன்.

இதையும் படிங்க: பொறக்கும் போதே சலங்கை கட்டி பொறந்தவங்க! அவங்களோட ஆடுறதா? எம்ஜிஆர் சொன்ன நடிகை யாரு தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்திற்குத்தான் பத்திரிக்கையாளர்கள் சேர்ந்து விழா எடுத்து கொண்டாடினார்கள். மற்ற எந்த படத்திற்கும் அப்படி நடக்கவில்லை. அந்தளவுக்கு பெருமை சேர்த்த படமாக அமைந்தது பருத்திவீரன்.

அப்படிப்பட்ட படத்தை எடுத்த அமீரை இந்தளவு பேசியிருக்கவும் கூடாது. மேலும் அமீரோ அல்லது ஞானவேல் ராஜாவோ இந்த பிரச்சினையை எடுத்து வரவில்லை. யாரோ ஒருவர் மூலமாகத்தான் இது இந்தளவுக்கு பெரிதாகியிருக்கிறது. ஆகவே இரு தரப்பும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்தால் நல்லது என பேரரசு கூறினார்.

இதையும் படிங்க: காதலுக்காக ஏங்கும் நாயகிகளின் கதையில் ஹீரோ செய்த புதுமை!.. பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அழகன்

 

Published by
Rohini

Recent Posts