எங்க போனாலும் முட்டுக்கட்டையா? விடாமுயற்சியை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’க்கும் வந்த சிக்கல்
Actor Ajith: கோலிவுட்டில் ஹேண்ட்ஸம்மான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். எந்த பிரச்சினையிலும் தலையிடாதவர். ரசிகர்களை அவ்வளவு எளிதாக சந்திக்காதவர். ரசிகர்களுடன் அடிக்கடி போட்டோ மற்றும் உரையாடுவது என எதையும் விரும்பாதவர். இப்படி இருக்கும் ஒருவர் மீது உயிரையே வைத்திருக்கும் அளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் தற்போது கவனம் ,செலுத்தி வரும் அஜித் தேர்தல் முடிந்த பிறகு கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக வெளி நாடு செல்ல இருக்கிறார். ஒரு வருடமாக விடாமுயற்சி படம் கிடப்பிலேயே இருந்தாலும் மொத்தமாக 60 சதவீத படப்பிடிப்புதான் முடிந்திருக்கிறது. இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு இருக்கிறது, அதனால் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் எப்படியாவது படப்பிடிப்பை முடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அந்த படத்தில் நான் நடிக்கவா? ஆசையாக கேட்ட சரத்குமார்… முடியவே முடியாது என மறுத்த இயக்குனர்!…
அதற்கு அடுத்த படியாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். அந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் ஆரம்பமே அமர்க்களம் என்பதை போல் குட் பேட் அக்லி படத்திற்கும் இப்போது புதிய சிக்கல் வந்திருக்கிறது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால்தான் விடாமுயற்சி படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதனால் குட் பேட் அக்லி படத்தை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இதில் இரண்டு தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களாம். அதில் ஒருவர் பெயர் நவீன் எர்னானி. அவர் மீது இப்போது போலீஸ் புகார் ஒன்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நீயெல்லாம் அவனுக்கு முன்னாடி தூசுக்கு சமம்.. இனி ஷூட்டிங் வந்த செருப்பால் அடிப்பேன்… ரஜினியை மிரட்டிய கே.பாலசந்தர்!…
நவீன் எர்னானி சினிமா தயாரிப்பு போக வேறொரு பிஸினஸும் செய்து வருகிறாராம். அவர் ஏதோ ஆடியோ ஒட்டுக் கேட்பு விஷயத்தில் சிக்கியதாகவும் அவர் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்பிருப்பதாகவும் அப்படி பாய்ந்தால் அவர் சிறையில் அடைக்கப் படுவார் என்றும் கூறப்படுகிறது. அப்படி நவீன் சிறைக்கு சென்றால் மொத்த நிறுவனமும் முடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.